சூன்யப்பிறவி

Saturday, May 23, 2009


நீண்ட சிந்தனைக்குப் பின்னும்
ஒற்றை வாரத்தையும்
உருப்பெறாமல் உடைந்து
சிதறிக்கிடந்தது வார்த்தைகளனைத்தும்.

அறைமுழுதும் வியாபித்திருந்த
உன் பிம்பங்கள் நிலைகொள்ளாத
என்னங்களை காரணமற்ற திசையில்
குவித்துக் கலைத்துப் போட்டது.

நடுப்பகல் வெயிலில் புலுதிமண்ணில்
உருண்டு புரளும் கழுதையென மனம்
வெறுப்புற்று வெறுமையின் வனாந்திரதில்
தனித்துக் கிடந்தது.

பொறுமை இழந்த மின் விசிறி
விரித்து வைத்திருந்த வெற்றுக்
காகிதத்தை திரும்ப திரும்ப
கீழெறிந்தது.

பேனாவின் கூர் முனை
சொற்க்களை கொலை செய்து
குப்பையில் போட்டிருந்தது.

இருக்கை, விரல்கள், பார்வை
சுவாசம் எதுவும் என் வசம் தவறி
மண்டைகூடுடைத்து சில கொம்புகளும்
முதுகுத்தண்டின் கிளைந்தெழுந்த ஒற்றை
சிறகுமாய் என் இருப்பை சூன்யத்தின்
கோரக்கனங்கள் மாற்றியிருந்தது.

பற்கள் நீண்ட உன் நினைவுகள்
என் சுவாசத்தை நெறிக்கையில் அம்
மாய கனத்தின் விளங்குடைத்து
வெளிப்பட்ட நான் விரல்களை
என்னிபார்த்து விட்டு
சன்னல் அறுகில் வந்து வெளிபார்த்தேன்
சூடு குறைந்த அம்மாலை வெயில்
என் மெய்புலன்களை மீட்டுதந்தது

அறுகில் நின்றிருந்த தென்னையில்
யாரையும் கவனிக்காமல்
கட்டுகளற்ற சுதந்திரத்துடன்
புணர்ந்துக் கொண்டிருந்தன
இரு அனில்கள்.

0 comments:

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP