வார்த்தைக் கவிதை இரண்டு

Wednesday, June 3, 2009


வார்த்தைகள் நிரைந்த வெளி

வார்த்தைகளின் முடிச்சவிழ்க்கும் சூட்சுமம்
அறியாது அதன் வடிவங்களை பிரித்தெடுப்பதாய்
நாவால் பற்றி இழுக்கின்றேன்.
மையப்பகுதி விடுபட்டு கீழ்விழும் நான்
சிதறிக் கிடக்கும் சொற்களை அடுக்கி
மீண்டும் வார்த்தைச் செய்ய முயல்கின்றேன்.
தப்பியோடும் வார்த்தைகளை பின்
தொடர வெளியெங்கும் நிறைந்துக்
கிடக்கின்றன ஏதேதோ வார்த்தைகள்.
பறவையின் நிழலென ஊர்ந்துக் கொண்டே
இருக்கும் வார்த்தையை பிடிக்குள் இருத்த
சர்ப்பத்தின் நடனத்தோடு காத்திருக்கின்றேன்.
சுற்றிலும் வளர்ந்துக் கொண்டே இருக்கும்
வார்த்தைகளற்ற மௌனம் மெல்ல தன்
பிடிக்குள் இழுத்துச் செல்கையில்
கதவிடையில் புகும் வெளிக் காற்று
சப்தத்தை ஊற்றி நிரப்பிச் செல்கின்றது.
அலறி வெளியேறும் மௌனம் எனக்கான
வார்த்தையை ஈன்று தந்து விட்டு
மொழிகளற்ற ஆதிக்குள் பயணித்துக்
கொண்டிருக்கின்றது.

___*___



வார்த்தையற்றவன்

சரளமான பேச்செனக்கு
வாய்த்திரவில்லை
உங்களின் வார்த்தைகளை
வைத்தை என் வார்த்தைகளை
தேர்ந்துக் கொள்கின்றேன்.
முனை மங்கிய பற்களுக்கிடையில்
சிக்கி வெளிவரும் என் வார்த்தைகள்
உயிரற்றது என்பதை உங்களால்
உணர்ந்து கொள்ள முடியாது.
அர்த்தமற்ற சொற்களைக் குவித்து
என்னிடம் எதை தேடுகிறீர்கள்
என்னை எப்போதும் மீட்டுச் செல்லும்
சிறு புன்னகையை தவிற வேறென்ன
இருக்கப் போகிறது என்னிடம்.
பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கும்
என் மௌனத்தையும் கலைந்து விட்டு
போய் விடுங்கள் இல்லையெனில்
உங்கள் நிழலைப் போல்
உங்கள் பின்னாலேயே வரக்கூடும்.

29 comments:

ப்ரியமுடன் வசந்த் June 3, 2009 at 12:07 PM  

//என்னை எப்போதும் மீட்டுச் செல்லும்
சிறு புன்னகையை தவிற வேறென்ன
இருக்கப் போகிறது என்னிடம்.//

அது போதும் முத்து

நசரேயன் June 3, 2009 at 3:13 PM  

நல்ல விளக்கம்

ஆ.ஞானசேகரன் June 3, 2009 at 5:34 PM  

//சிதரிக் கிடக்கும் சொற்களை அடுக்கி
மீண்டும் வார்த்தைச் செய்ய முயல்கின்றேன்.//

நல்ல வரிகள்

//என் மௌனத்தையும் கலைந்து விட்டு
போய் விடுங்கள் இல்லையெனில்
உங்கள் நிழலைப் போல்
உங்கள் பின்னாலேயே வரக்கூடும்.///

அருமையாக இருக்கு நண்பா

புதியவன் June 3, 2009 at 6:44 PM  

முதல் கவிதை பின் நவீன எழுத்துக்களில் பிரகாசிக்கிறதென்றால் இரண்டாவது அதற்கு நேரெதிரான யதார்த்தம் இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு முத்துராமலிங்கம்...

சில எழுத்துப் பிழைகள் உள்ளன திருத்திவிடுங்கள்


//சிதரிக் //

“சிதறிக்”

ஆதவா June 3, 2009 at 6:52 PM  

முதல் கவிதையைப் போன்றதொரு எதிர்கவிதையொன்று என்னிடமுள்ளது. எதிர்கவிதை என்றும் சொல்லிவிடமுடியாது. இங்கே மெளனம் ஈன்று தருவதைப் போன்று நான் எழுதியவற்றிலும் மெளனமே வார்த்தை பெற்றெடுப்பதாக குறிப்பிடுகிறேன். அது கொஞ்சம் வேற டைப். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19332)

நிரிப்பி - நிரப்பி

காற்றுபுகுந்து சப்தம் நிரப்பி மெளனம் அலறி..... நல்ல போராட்டம்.

இரண்டாம் கவிதை ஒரு ஊமையின் வாயிலாகவே படிக்க நேர்ந்தது. அதென்னவோ என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை. நல்ல வார்த்தையாக்கம்! கடைசி வரியில் வார்த்தை எனும் சொல் குறைந்திருப்பதைப் போன்றதொரு தோற்றம்.

இரண்டு கவிதைகளையும் ஏதாவது இதழுக்கு அனுப்பிவைக்கலாமே

ஆ.சுதா June 3, 2009 at 7:22 PM  

நன்றி வசந்த்,
நன்றி நசரேயன் (அப்ப கவிதை இல்லைன்ரீங்கலா)
நன்றி ஆ.ஞானசேகரன், பிடித்த வரிகளை சுட்டிக்காட்டியதற்கு இன்னும் ஒரு நன்றி!

ஆ.சுதா June 3, 2009 at 7:27 PM  

நன்றி புதியவன், |இரண்டாவது அதற்கு நேரெதிரான யதார்த்தம்| இதைதான் நானும் முயற்சித்தேன் அது உங்களால் சுட்டிக்காட்டபடும் போது மகிழ்ச்சியே!

|சில எழுத்துப் பிழைகள் உள்ளன திருத்திவிடுங்கள்|

நச்சயம் புதியவன் அவ்வப் போது இது போல எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டுங்கள் நன்றியாக உணர்வேன்.


..சரி புதியவன் உங்க கவிதை படித்து கொஞ்சநாள் ஆகிவிட்டது.

ஆ.சுதா June 3, 2009 at 7:46 PM  

நன்றி ஆதவன். கவிதை குறித்த உங்கள் பார்வை இன்னும் விரிவடையச் செய்கின்றது கவிதையை.
உங்கள் கவிதைகளைப் படித்தேன் மூன்று மிக அருமையானக் கவிதை. அதை ஏன் இன்னும் உங்கள் தளத்தில் பதிவிடவில்லை ஆதவா.

|இரண்டு கவிதைகளையும் ஏதாவது இதழுக்கு அனுப்பிவைக்கலாமே|

அனுப்புகின்றேன்.

மயாதி June 3, 2009 at 7:57 PM  

கவிதையில்லீங்க அதுக்கும் மேல.....
அசத்துங்க .!

ஆ.சுதா June 3, 2009 at 8:02 PM  

மயாதி said...
|கவிதையில்லீங்க| என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..... நான் கவிதைனு நெனைச்சுதான் எழுதினேன்.
|அதுக்கும் மேல.....| அடுத்த வரியில வேறேதோ சொல்லி சமாதனப் படுத்திட்டீங்க!


நன்றி மயாதி.

Suresh June 3, 2009 at 9:44 PM  

//தப்பியோடும் வார்த்தைகளை பின்
தொடர வெளியெங்கும் நிறைந்துக்
கிடக்கின்றன ஏதேதோ வார்த்தைகள்.
பறவையின் நிழலென ஊர்ந்துக் கொண்டே
இருக்கும் வார்த்தையை பிடிக்குள் இருத்த
சர்ப்பத்தின் நடனத்தோடு காத்திருக்கின்றேன்.//

வார்த்தை விளையாடுது முத்து...

Suresh June 3, 2009 at 9:44 PM  

//சிறு புன்னகையை தவிற வேறென்ன
இருக்கப் போகிறது என்னிடம்.//

அது போதுமே நீ தான் இந்த உலகத்தின் அதிர்ஷடசாலி

கார்த்திகைப் பாண்டியன் June 3, 2009 at 9:59 PM  

இரண்டுமே அருமை என்றாலும் இரண்டாவதை வெகுவாக ரசித்தேன்..

//பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கும்
என் மௌனத்தையும் கலைந்து விட்டு
போய் விடுங்கள் இல்லையெனில்
உங்கள் நிழலைப் போல்
உங்கள் பின்னாலேயே வரக்கூடும்.//

வார்த்தைகள் கூட வலியைத் தர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.. வாழ்த்துகள் நண்பா

Anonymous June 3, 2009 at 10:36 PM  

விகடனில் உங்கள் கவிதை வெளிவந்துள்ளது வாழ்த்துக்கள்.....

இரண்டு கவிதைகளுமே அருமை....

மெளனம் மொழி பெயர்ந்தது போல்.....வார்த்தை விளையாட்டு.... நல்லாயிருக்குங்க முத்து....

S.A. நவாஸுதீன் June 3, 2009 at 11:10 PM  

இரண்டு கவிதைகளும் அருமை நண்பரே.

ஆ.சுதா June 3, 2009 at 11:35 PM  

Suresh said...
//தப்பியோடும் வார்த்தைகளை பின்
தொடர வெளியெங்கும் நிறைந்துக்
கிடக்கின்றன ஏதேதோ வார்த்தைகள்.
பறவையின் நிழலென ஊர்ந்துக் கொண்டே
இருக்கும் வார்த்தையை பிடிக்குள் இருத்த
சர்ப்பத்தின் நடனத்தோடு காத்திருக்கின்றேன்.//

வார்த்தை விளையாடுது முத்து...

ஒரு வாரமா விளையாட்டுக் காட்டியது. இப்ப அதுவே வார்த்தை விளாயாட்டாகிடுச்சு


//சிறு புன்னகையை தவிற வேறென்ன
இருக்கப் போகிறது என்னிடம்.//

அது போதுமே நீ தான் இந்த உலகத்தின் அதிர்ஷடசாலி

இது தான் வேணும் நண்பா.

ஆ.சுதா June 3, 2009 at 11:38 PM  

கார்த்திகைப் பாண்டியன் said...
இரண்டுமே அருமை என்றாலும் இரண்டாவதை வெகுவாக ரசித்தேன்..

வார்த்தைகள் கூட வலியைத் தர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.. வாழ்த்துகள் நண்பா

நன்றி நண்பா!

ஆ.சுதா June 3, 2009 at 11:39 PM  

நன்றி தமிழிரசி. |விகடனில் உங்கள் கவிதை வெளிவந்துள்ளது வாழ்த்துக்கள்.....| சந்தோசம்ங்க, இதற்குத் ஒரு நன்றி.

நன்றி S.A. நவாஸுதீன்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் June 4, 2009 at 5:19 AM  

வார்த்தயற்றவன் நானும். வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.சுதா June 4, 2009 at 5:28 AM  

நன்றி சேரல்.

குடந்தை அன்புமணி June 4, 2009 at 7:21 AM  

இரண்டு கவிதையும் சூப்பராக இருக்கு முத்துராமலிங்கம். ஆதவா சொல்வதுபோல் உடனே இதழுக்கு அனுப்பிவையுங்கள்.

வினோத் கெளதம் June 4, 2009 at 8:02 AM  

முத்து வர வர பின்னுறிங்க..விகடனில் வந்து இருக்ரிர்கள் வாழ்த்துக்கள்..
ஆனா இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கு..:))

ஆ.சுதா June 4, 2009 at 8:25 AM  
This comment has been removed by the author.
ஆ.சுதா June 4, 2009 at 8:26 AM  

நன்றி அன்புமணி.
நன்றி கௌதம். (ஏதாவது நடக்குமா பார்க்கலாம்)

யாத்ரா June 4, 2009 at 9:32 AM  

முத்து நல்ல கவிதைகள், மிகவும் பிடித்திருக்கிறது.

MSK / Saravana June 4, 2009 at 11:44 AM  

இன்று தான் தெரிந்து கொண்டேன், உங்களின் பதின்மரக்கிளை முடக்கப்பட்டு விட்டதை.
ரொம்ப அதிர்ச்சியா இருக்கு..
நான் ரீடரில் உங்கள் தளத்தில் புதிய பதிவுகள் எதுவும் நீங்கள் பதியவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன்..

MSK / Saravana June 4, 2009 at 11:45 AM  

வழக்கம் போல அழகானக் கவிதைகள்.. செமையா எழுதறீங்க முத்து.

மாதவராஜ் June 4, 2009 at 1:26 PM  

வார்த்தைகளைத்தாண்டி இரண்டுமே மௌனத்தை பேசுகின்றன.
//என்னை எப்போதும் மீட்டுச் செல்லும்
சிறு புன்னகையை தவிற வேறென்ன
இருக்கப் போகிறது என்னிடம்.//
ரசித்தேன்.

ஆ.சுதா June 4, 2009 at 7:43 PM  

நன்றி யாத்ரா
நன்றி சரவணக்குமார் (ஆமாம் சரவணன் தளம் அழிந்ததில் எனக்கும் அதிர்ச்சிதான் என்னுடைய கவனகுறைவால் ஏற்பட்டது)
நன்றி மாதவராஜ் சார்

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP