சகுனம் பார்க்கத் தெரியாதவன்

Friday, June 5, 2009


வர வர இடறிக்கொண்டே
இருந்தது. சகுனம் பார்க்கத்
தெரியவில்லை எனக்கு.
வரும் போது யாருடைய
முகத்தைப் பார்த்து வந்தேன்.
நினைவில்லை.
பூனையோ பல்லியோ அவைகளின்
செயல்களில் கூர்ந்திருக்க எனக்கு
தோன்ற வில்லை.
மேகம் கூட விலகி சுள்ளென்று.
வெயில் அடித்தது,
இல்லை எனில் அந்தச் சிறுவன்
சைக்கிளில் என் மீது மோதியிருக்க
மாட்டான்.
போய் சேர்ந்த பின்புதான்
பார்த்தேன் என்னை போலவே இன்னும்
சில பேர் வந்திருந்தனர்.
ஒரு வேளை நான் போனது கூட
அவர்களுக்கு சகுனம் பார்க்க
உதவியிருக்கலாம். யார் முகத்திலும்
நம்பிக்கை இல்லை.

18 comments:

கவி அழகன் June 5, 2009 at 10:21 AM  

இலங்கையில் இருந்து யாதவன்

உங்கள் படைப்பு நன்றாக உள்ளது

மாதவராஜ் June 5, 2009 at 10:50 AM  

சொல்ல வந்த விஷயம் புரிகிறது.
//வர வர இடறிக்கொண்டே
இருந்தது.//
//யார் முகத்திலும்
நம்பிக்கை இல்லை. //
முதல், கடைசி வரிகளுக்குமிடையில் சொல்ல வந்த விஷயத்தில் எதோ இன்னும் சொல்லாமல் இருப்பது போலிருக்கிறதே நண்பரே!
எழுத்துப்பிழைகள் சரி பார்க்கவும்.
சுல்லென்று அல்ல... சுள்ளென்று.

ப்ரியமுடன் வசந்த் June 5, 2009 at 11:13 AM  

கவிதை ஜொளிக்கிறது

வினோத் கெளதம் June 5, 2009 at 12:56 PM  

நல்லா இருக்கு நண்பரே..

ஆ.ஞானசேகரன் June 5, 2009 at 6:01 PM  

//ஒரு வேளை நான் போனது கூட
அவர்களுக்கு சகுனம் பார்க்க
உதவியிருக்கலாம். யார் முகத்திலும்
நம்பிக்கை இல்லை.//

நல்லா இருக்கு நண்பா..


மாதவராஜ் சொல்வது போல் ஏதோ சொல்ல தவறியது போல இருக்கு

சேரலாதன் பாலசுப்பிரமணியன் June 5, 2009 at 8:16 PM  

அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

புதியவன் June 5, 2009 at 9:03 PM  

கவிதை நல்லா இருக்கு முத்துராமலிங்கம்...

Anonymous June 5, 2009 at 9:45 PM  

சகுனம் பார்க்கச் சொல்றீங்களா? வேணாமுன்னு சொல்றீங்களா?

அப்துல்மாலிக் June 6, 2009 at 12:31 AM  

சகுனத்திற்கு ஒரு அடி

நல்லாயிருக்கு தோழரே

ஆ.சுதா June 6, 2009 at 3:47 AM  

நன்றி - கவி கிழவன்
நன்றி - மாதவராஜ் சார். (வரிகளை இன்னும் வழுபடுத்தி இருக்கலாம்!! சுட்டிக்காட்டும் போது புரிகின்றது)
எழுத்துப் பிழையை திருத்துக் கொண்டேன்.
நன்றி வசந்த்
நன்றி கௌதம்
நன்றி ஞானசேகரன்
நன்றி சேரல்
நன்றி புதியவன்
நன்றி அபுஅஃப்ஸர்

கார்த்திகைப் பாண்டியன் June 6, 2009 at 5:51 AM  

நீங்கள் சொல்லி இருப்பது புரிகிறது நண்பா.. இன்னும் கொஞ்சம் சீர் செய்து இருக்கலாம்.. வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் June 7, 2009 at 8:34 PM  

பூனையோ பல்லியோ அவைகளின்\\

இந்த வரியில் பூனை இல்லாவிட்டால்

பூனை சொன்னது போலவே இருந்து இருக்கும் ...

சகுனத்திற்கு சவுக்கடி

ஆ.சுதா June 8, 2009 at 2:53 AM  

நன்றி ஜாமால் வருகைக்கும் பகிர்வுக்கும்

ஷண்முகப்ரியன் June 8, 2009 at 9:54 AM  

இன்றுதான் உங்கள் முதல் கவிதையைப் படித்தேன்.அறிமுகமே அருமை,சார்.

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி June 12, 2009 at 5:28 AM  

அருமை...

ஆ.சுதா June 12, 2009 at 6:56 AM  

நன்றி ஷண்முகப்பிரியன்
நன்றி நசரேயன்
நன்றி கோகுலகிருஷ்ணன்

Unknown June 12, 2009 at 8:22 AM  

நல்லா இருக்கு.

//ஒரு வேளை நான் போனது கூட
அவர்களுக்கு சகுனம் பார்க்க
உதவியிருக்கலாம். யார் முகத்திலும்
நம்பிக்கை இல்லை//

புரியவில்லை.

Jambu June 12, 2009 at 10:56 AM  

ennappa ithu.. enna solla vareenga. payyan pavamaa illa neenga pavama...

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP