கனவுகளை வெளியெறிதல்.

Thursday, June 11, 2009

இது ஒரு மீள் பதிவு! என் பழைய தளமான ‘பதின்மரக்கிளை’யில் பதிவிட்டது. தற்போது அத்தளம் அழிந்து விட்டதால் அவ்வப்போது மீள்பதிவாக்கலாம் என்ற எண்ணம். புதிய நண்பர்களுக்கு இது ஒரு அறிமுகமாக இருக்கலாம் ஏற்கனவே படித்த நண்பர்கள் கொஞ்சம் அஜஸ் பண்ணிக்கங்கோ!! (இது உண்மை இல்ல தற்சமயம் பதிவிட ஒன்னுமில்லை அதான்)


------------------------------------------------------------------------------------------------


இப்ப கவிதை.....


நிசப்தம் கூடியிருந்த
அவ்விரவில் உன் கனவுகளை
விரித்துப் படுத்திருந்தேன்

இருளில் கரைந்திருந்த
நீ மெல்ல உருக்கொண்டு என்மீது
கவிழத் துவங்கினாய்

சாத்தி வைக்காத கதவைத் தாண்டிப்
பீறிட்டு வந்த அப்பூனையின் சப்தம்
நிசப்தத்தை உடைத்து விட்டு
உன்னைக் கொலை செய்திருந்தது.

*-*

உன் வருகையை
அவதானித்து
மதில் சுவரில் அமர்ந்திருந்தேன்
நேரம் கடந்து போவதை
நிழல் உறுதிபடுத்திக் கொண்டிருந்தது

மின் கம்பத்தில் அமர்ந்து
செல்லும் குருவிகளின் சுவடுகளை
பத்திரப் படுத்துவதாய் அதனின் நிழலை
அள்ளிக் கைகளுக்குள் அடைத்து வைத்துக்
கொண்ட போதும் அவைகள் சிரமமின்றி
விடுபட்டுப் பறந்து சென்று விட்டன

வெளியெங்கும் நான் விரித்து
வைத்திருந்த வலை அறுபடத்
துவங்கிய போது காலருகில்
நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பறவை போலவே பறக்க முடியாமல்
என்னைப் பின்தொடர்ந்தது



:-உயிர்மையில் வந்தது

24 comments:

மாதவராஜ் June 11, 2009 at 11:40 AM  

பிரமாதம் நண்பரே...
ஒவ்வொரு வரியும், அர்த்தங்களோடு விரிகிறது. வாழ்த்துக்கள். உங்கள் ஈ மெயில் முகவரி தரலாமா....

வினோத் கெளதம் June 11, 2009 at 3:02 PM  

என்ன சொல்றது நண்பா வார்த்தைகள் இல்லை..
ஒரு தேர்ந்த கவியை போல் எழுதி உள்ளிர்கள்..இது தான் நிஜம்..

ஷண்முகப்ரியன் June 11, 2009 at 3:44 PM  

//வெளியெங்கும் நான் விரித்து
வைத்திருந்த வலை அறுபட
துவங்கிய போது காலருகில்
நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பறவை போலவே பறக்க முடியாமல்
என்னை பின்தொடர்ந்தது.//

கவிதை அருமை,ஆ.மு.

சில சந்திப் பிழைகளை மட்டும் சரி செய்யவும்.

ஆ.ஞானசேகரன் June 11, 2009 at 5:55 PM  

//நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பறவை போலவே பறக்க முடியாமல்
என்னை பின்தொடர்ந்தது.//

நல்ல வரிகள் நண்பா

மயாதி June 11, 2009 at 7:18 PM  

உங்களுக்கு பழசு , எங்களுக்கு புதுசு....
நாங்கள் நீங்கள் கூறிய புதியவர்கள்.
நல்லாருக்கு

புதியவன் June 11, 2009 at 7:19 PM  

இது உங்கள் தளத்தில் முன்பே படித்த் கவிதைகள் தான்...

மீண்டும் படிக்கத் தூண்டும் கவிதைகளை மீள் பதிவிடுவதில் தவறில்லை முத்துராமலிங்கள்...

//(இது உண்மை இல்ல தற்சமயம் பதிவிட ஒன்னுமில்லை அதான்)//

இது அழகு...

ஆ.சுதா June 11, 2009 at 7:36 PM  

வணக்கம் மாதவராஜ் சார்.
புரிந்துணர்ந்த பாராட்டிற்கு என் வெகுவான நன்றிகள். என் ஈ முகவரி:
a.muthuramalingam5@gmail.com
***

@ வினோத்கெளதம்
|என்ன சொல்றது நண்பா வார்த்தைகள் இல்லை..| எதுவுமே சொல்ல வேண்டியதில்லை நண்பா உணர்தலே எனக்கான உந்துதல்.
மிகவும் நன்றி கௌதம்.
***

@ ஷண்முகப்ரியன்

கவிதை அருமை,ஆ.மு.

ரொம்பவும் நன்றி.
உங்களை போல அனுபவ மிக்கவர்களின் பாராட்டும் கருத்தும் கிடைக்கும் பொழுதில் இன்னும் எழுத வேரென்ன தேவை!

|சில சந்திப் பிழைகளை மட்டும் சரி செய்யவும்.|

சொல்லித்தரவும் நேரம் இருப்பின். (அன்பான வேண்டுகோள்)
***


மீள் பதிவானாலும் மீண்டும் படித்து
பிடித்த வரியை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி ஆ.ஞானசேகரன்.
***

ஆ.சுதா June 11, 2009 at 7:46 PM  

@ மயாதி
உங்களுக்கு பழசு , எங்களுக்கு புதுசு....
நாங்கள் நீங்கள் கூறிய புதியவர்கள்.
நல்லாருக்கு

நன்றி!
---

வாங்க புதியவன்.

|இது உங்கள் தளத்தில் முன்பே படித்த் கவிதைகள் தான்...

மீண்டும் படிக்கத் தூண்டும்|

நன்றிகள் பல..!

|கவிதைகளை மீள் பதிவிடுவதில் தவறில்லை முத்துராமலிங்கள்...|

அப்பாடா... நீங்களே சொல்லிட்டீங்க
இனி தொடர்ந்து நடக்கும்.

//(இது உண்மை இல்ல தற்சமயம் பதிவிட ஒன்னுமில்லை அதான்)//

|இது அழகு...|

ஹா! ஹா! என்ன ஒரு ரசனை!!!
புதியவன்.

ரொம்பவும் நன்றி புதியவன்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் June 11, 2009 at 7:49 PM  

நல்ல கவிதைகள் நண்பரே!

ஷண்முகப்ரியன் சொல்லியிருப்பது போல, சில சந்திப்பிழைகள் இருக்கின்றன. திருத்திக்கொள்ளுங்கள்.

எனக்குத் தெரிந்தவை,

//கதவை தாண்டி
பீறிட்டு - கதவைத் தாண்டிப் பீறிட்டு//

//உன்னை கொலை - உன்னைக் கொலை//

//மதில்ச் சுவரில் - மதில் சுவரில்//

//அமர்ந்துச் செல்லும் - அமர்ந்து
செல்லும்//

//சுவடுகளை பத்திரப்படுத்துவதாய் - சுவடுகளைப் பத்திரப்படுத்துவதாய்//

//அறுபட துவங்கிய - அறுபடத் துவங்கிய//

//என்னை பின்தொடர்ந்தது - என்னைப் பின்தொடர்ந்தது//

ஓர் எழுத்துப்பிழை
//சிரம்மின்றி - சிரமமின்றி//

பிழை திருத்துபவன் வேலை பார்த்திருக்கிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நல்ல படைப்புகளில் தெரியாமல் நுழைந்து விடுகிற இது போன்ற தவறுகள், படைப்பின் மதிப்பைக் குறைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சொன்னேன்.

-ப்ரியமுடன்
சேரல்

ஷண்முகப்ரியன் June 11, 2009 at 9:21 PM  

நிசப்தம் கூடியிருந்த
அவ்விரவில் உன் கனவுகளை
விரித்துப் படுத்திருந்தேன்

இருளில் கரைந்திருந்த
நீ மெல்ல உருக்கொண்டு என்மீது
கவிழத் துவங்கினாய்

சாத்தி வைக்காத கதவைத் தாண்டிப்
பீறிட்டு வந்த அப்பூனையின் சப்தம்
நிசப்தத்தை உடைத்து விட்டு
உன்னைக் கொலை செய்திருந்தது.

*-*

உன் வருகையை
அவதானித்து
மதில் சுவரில் அமர்ந்திருந்தேன்
நேரம் கடந்து போவதை
நிழல் உறுதிபடுத்திக் கொண்டிருந்தது

மின் கம்பத்தில் அமர்ந்து
செல்லும் குருவிகளின் சுவடுகளை
பத்திரப் படுத்துவதாய் அதனின் நிழலை
அள்ளிக் கைகளுக்குள் அடைத்து வைத்துக்
கொண்ட போதும் அவைகள் சிரமமின்றி
விடுபட்டுப் பறந்து சென்று விட்டன

வெளியெங்கும் நான் விரித்து
வைத்திருந்த வலை அறுபடத்
துவங்கிய போது காலருகில்
நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பறவை போலவே பறக்க முடியாமல்
என்னைப் பின்தொடர்ந்தது.//

முழுமையாகப் பிழைகளைத் தவிர்த்து இருக்கிறேன்.சரி பார்த்துக் கொள்ளவும் ஆ.மு.

நந்தாகுமாரன் June 11, 2009 at 9:32 PM  

அருமையான கவிதை

கார்த்திகைப் பாண்டியன் June 11, 2009 at 9:32 PM  

நான் இதை முதல் முறையாக படிக்கிறேன் முத்து..


//வெளியெங்கும் நான் விரித்து
வைத்திருந்த வலை அறுபட
துவங்கிய போது காலருகில்
நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பறவை போலவே பறக்க முடியாமல்
என்னை பின்தொடர்ந்தது.//

இந்த வரிகள் அருமை..

ஆ.சுதா June 11, 2009 at 10:01 PM  

சேரல், ஷண்முகப்ரியன் இருவருக்கும் என் மனமுவந்த நன்றிகள்!

எழுத்துப் பிழை எனக்கு கவிதைகளை விட இயல்பாக வந்து விடுகின்றது.
இந்த சந்திப்பிழை கவனக்குறைவுதான்
இனி இது போல் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றேன்.

சேரல் உங்களின் 'கற்பித்தல்' உயர்ந்தது. எனக்கு மிகுந்த சந்தோசமே.

ஆ.சுதா June 11, 2009 at 10:04 PM  

@ நன்றி நந்தா.

@ பாண்டியன் முன்பு படிக்கலையா?
ஆஹா!! அப்ப மீள்பதிவு தவறில்லை!
நன்றி பாண்டியன் ரசித்தமைக்கு.

ப்ரியமுடன் வசந்த் June 11, 2009 at 11:00 PM  

பழையன மீள்தல் சுகமானது
காதல்,
கவிதை,
இரண்டும்

இப்போத்தான் படித்தேன்

பிரம்மாதமான் கவிதை முத்து

மறத்தமிழன் June 11, 2009 at 11:49 PM  

நண்பரே அருமையான கவிதை...

அதுவும் எளிய‌ மொழியில்

தொட‌ர‌ட்டும் த‌ங்கள் க‌விப்ப‌ய‌ண‌ம்...

வாழ்த்துக்கள் !

அன்புட‌ன்,
ம‌ற‌த்த‌மிழ‌ன்..

Anonymous June 12, 2009 at 12:31 AM  

முதல் வரி சிலிர்த்தது....ஆரம்பமே அதிரடி......தொலைந்ததை தேடி எங்கள் பார்வைக்கு பரிசாய் தந்து இருக்கீறீர்கள்... நிசப்தமான நிம்மதி

அன்புடன் அருணா June 12, 2009 at 4:50 AM  

//காலருகில்
நின்றிருந்த என் நிழல் சிறகு முறிந்த
பறவை போலவே பறக்க முடியாமல்
என்னைப் பின்தொடர்ந்தது//
சூப்பர்!!!

ஆ.சுதா June 12, 2009 at 6:54 AM  

நன்றி வசந்த்
நன்றி மறத்தமிழன்
நன்றி தமிழரசி
நன்றி அருணா

Gowripriya June 12, 2009 at 8:00 AM  

அருமை.. மிகவும் ரசித்தேன்..

ny June 13, 2009 at 8:48 PM  

absolute beauty!!
முதன்முறை வாசிக்கிறேன்..
பதின்மரக் கிளை இன்னும் பரவட்டுமே :)

ஆ.சுதா June 14, 2009 at 7:48 AM  

வாங்க கார்த்தி!
உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி
பாராட்டிற்கும் நன்றி

Anonymous June 15, 2009 at 9:37 AM  

பிரமாதம். அருமையான கவிதை

நேசமித்ரன் June 17, 2009 at 5:11 AM  

நல்ல சொல்லாடல் நேர்த்தியான படிமத்தேர்வு..
அழகிய கவிதை

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP