இது பதிலல்ல….!

Sunday, June 21, 2009


ந்த கேள்விகள் ஒருவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. பல கேள்விகள் அபத்தமாகவும், கேலித்தலுமாக உள்ளது. இதை உருவாக்கியவர் வெறும் பொழுது போக்கு நோக்கத்தில் மட்டுமே உருவாக்கி இருக்கக் கூடும் என்பது என் எண்ணம். அவ்வகையில் தொடர்ந்து நானும்….. என்னை அழைத்தவர் நண்பர் அன்புமணி
அவர்கள்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

தெரியவில்லை. அம்மா அப்பா வைத்தது.
பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுகை என்னோடு நிரந்தரமானது அதிக மகிழ்ச்சி, கோபம், ஏமாற்றம்,
வலி, துன்பம், பிரிவு எதிலிருந்தும் என்னை மீட்பது கண்ணீரே!
கடைசியாக என்றால் சமீபத்தில் அண்ணணின் குழந்தைக்கு
ஆபரேசன் அன்று.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கவே பிடிக்காது. அது நாளொரு வேசம் கொள்ளும்.
பத்து வரிகளுக்கு மேல் எழுதினாள் விரல்கள் நடுங்கிவிடும் அதன் பின்
கோடுதான் வரும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

பசித்த நிலையில் எதுவானாலும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அடிப்படையில் நான் ஒரு கூச்ச சுபாவம் உள்ளவன். யாரிடமும் நட்பை விரும்பவே செய்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலும்…

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரை.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்த விசயம் முயற்சிப்பது. பிடிக்காத விசயம் எதையும் பாதியில் நிருத்தி விடுவது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் ஒரு பாதிதான்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மா, அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நிற வேட்டி (கம்பனி யூனிஃபார்மே இதுதான்) மெல்லிய பச்சைநிரமும் வெள்ளை நிரமும் கலந்த சட்டை

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கணினித் திரை. மின் விசிறியின் சப்தம்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நல்லா எழுதுகின்ற பேனாவாக.

14.பிடித்த மணம்?

மல்லிகை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

யாரையும் அழைக்கப் போவதில்லை.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

எல்லா பதிவுகளுமே. அதிலும் குறிப்பாக என்றால் கவிதைகள், மற்றும் ‘திருச்சேறையில் எனது கோடைக்காலங்கள்’ இந்த பதிவு

17. பிடித்த விளையாட்டு?

சிறு வயதில் நிறைய. தற்போது மட்டை பந்து.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நம்பும் படியாக. ரசிக்கும் படியாக.

20.கடைசியாகப் பார்த்த படம்?

lawrence of arabia

21.பிடித்த பருவ காலம் எது?

எல்லா காலமும்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?’

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’
எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: மெல்லிய சப்தங்கள்
பிடிக்காத்து: வாகன இரைச்சல், இரவு டீவி சப்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சென்னை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இல்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதுவென்று தெரியவில்லை. எல்லாமும் என்னிடமும் இருக்கலாம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்பு கோபம். இப்போது சோம்பல்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

மணப்பாடு, உவரி. நான் அதிகம் சுற்றுலா சென்றது இல்லை
இது சுற்றுலா தலமும் இல்லை. எங்க ஊர் அருகில் உள்ள
ஊர்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாருக்கும் தொந்தரவில்லாமல், சந்தோசமாக.

31.மனைவி (கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அந்த நிலை இல்லை.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இன்னும் அந்த அளவுக்கு அனுபவமில்லை.
இன்னும் வாழ வேண்டும் அவ்வளவே.

10 comments:

ஆ.ஞானசேகரன் June 21, 2009 at 8:03 PM  

உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு.. பாராட்டுகள்

காமராஜ் June 21, 2009 at 8:18 PM  

உங்கள் ரசனை, விருப்பம், பதில்கள் எல்லாவற்றையும்
சாப்பிட்டுவிடுகிறது பசித்த நிலையிலுள்ள எதார்த்தம்.
அண்ணன் குழந்தைக்கு அறுவை சிகிச்சை அழுவதற்கு
அன்புருகும் மனம் தேவை,
அது இருக்க ஆளலாம் உலகை.

sakthi June 21, 2009 at 10:19 PM  

அழுகை என்னோடு நிரந்தரமானது அதிக மகிழ்ச்சி, கோபம், ஏமாற்றம்,
வலி, துன்பம், பிரிவு எதிலிருந்தும் என்னை மீட்பது கண்ணீரே!

ஆம் உண்மைதான்

sakthi June 21, 2009 at 10:20 PM  

அழகான யதார்ததமான பதில்கள்

வினோத் கெளதம் June 21, 2009 at 11:23 PM  

படித்து விட்டேன்..உங்களுக்கு இந்த கேள்வி பதிலில் நம்பிக்கை இல்லாத பொழுது நான் என்னவென்று சொல்வது..

குடந்தை அன்புமணி June 23, 2009 at 12:50 AM  

பதிவர்களின் சொந்த அனுபவங்களை எழுதும் போதே அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்மதான் என்றாலும் இந்த கேள்வி பதிலின் மூலம் சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகவே ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.

குடந்தை அன்புமணி June 23, 2009 at 12:52 AM  

11.ஆம் கேள்விக்குரிய பதில்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உங்கள் உரிமையாளருக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துவிடுங்கள்.

குடந்தை அன்புமணி June 23, 2009 at 12:55 AM  

நான் பணிமுடிந்து வீட்டுக்கு சென்றதும் சாப்பி்ட்டுவிட்டு மாடிக்கு குடும்பத்தோடு சென்று காற்றுவாங்கியபடி நிலாவை ரசிப்பது எனக்கு பிடிக்கும். டீவியை தவிர்ததுவிடுவேன். 24க்குரிய கேள்விக்கு தங்களின் பதிலில லயித்துப் போய்விட்டேன்.

இரசிகை July 8, 2009 at 10:18 PM  

miga miga miga miga miga... yelimaiyaana pathilkal..


uvari yenakkum pidikkum...

சிவ. இராஜ்குமார் September 13, 2009 at 7:22 AM  

என்னா கேட்கிறாங்கன்றது முக்கியமில்ல நாம சொல்ற விசயதால நாலுபேருட்டு அறிவு பசி தீந்துச்சான்னு பாக்கணும்......you shouldn't have blamed the person who questioned u..!

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP