“தொடர்”வண்டி கவிதைகள்

Tuesday, June 23, 2009


சப்தத்தை இரைத்துக் கொண்டு
புறப்பட தயாரான இரயிலை
அவதானித்து பாதையின் பின்
வழியில் நின்றிருக்ககையில்
இரயில் பற்றிய சமிக்ஞை
ஏதுமற்று தண்டவாளத்தில்
இறை தேடும் பறவையை
அன்னிச்சையாய் விரட்டுகின்றேன்
என்னை கவனியாத அச்சிறு பறவை
அருகாமையில் வந்த இரயிலை
கவிழ்த்து விடும் துணிச்சலுடன்
சிறகுகளை வீசிக் கடந்து செல்கின்றது.

--==--

கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.

--==--

சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.
சக்கரங்களின் சுவடு
பதிந்திராத தண்டவாளத்தின்
இருபுறமும் முட்டி நின்ற வானம்
நோக்கி இரயிலின் சப்தத்தோடு கத்தி
அழைக்கின்றேன் மோதித் திரும்பும்
அதிர்வோசை சக்கரங்களற்ற என் சிறு
பிராயத்து இரயிலொன்றை இழுத்து
வருகின்றது. நான் நீள்வட்டக் கயிற்றில்
இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.

33 comments:

ny June 23, 2009 at 10:21 AM  

fan'taste'ic..

மாதவராஜ் June 23, 2009 at 10:28 AM  

காட்சிகளை வார்த்தைகளால், சித்திரமாக்கி இருக்கிறீர்கள். சொல்லும் மொழியில் கவிதை வசமாயிருக்கிறது. வாழ்த்துக்கள்.

மயாதி June 23, 2009 at 10:44 AM  

நல்லாருக்கு தல

selventhiran June 23, 2009 at 11:34 AM  

"அதிகாலை ரயில்
குடியிருப்புகளைக்
கடக்கையில்
குத்த வைத்த பெண்கள்
ஜன்னல் முகங்களை
சபிப்பர்" - ரொம்பப் பொடியனா இருக்கும்போது எழுதுனதுங்க... உங்க கடைசி கவிதைக்கும் இதுக்கும் சில 'சிமிலாரிட்டிஸ்'சட்னு ஞாபகம் வந்துடுச்சி!

வினோத் கெளதம் June 23, 2009 at 11:47 AM  

என்ன சொல்லுறது நாள் ஆக ஆக மெருகு ஏறிக்கிட்டு போகுது உங்கள் வரிகள்..

ஷண்முகப்ரியன் June 23, 2009 at 6:20 PM  

கவிதை உங்கள் கைக்குள்.
வாழ்த்துக்கள்.

ஆ.சுதா June 23, 2009 at 7:01 PM  

kartin said...
fan'taste'ic..

நன்றி கார்த்தி

ஆ.சுதா June 23, 2009 at 7:05 PM  

மாதவராஜ் said...
காட்சிகளை வார்த்தைகளால், சித்திரமாக்கி இருக்கிறீர்கள். சொல்லும் மொழியில் கவிதை வசமாயிருக்கிறது. வாழ்த்துக்கள்!

உங்கள் வாழ்த்தும் பாராட்டும் மகிழச் செய்கின்றது. மிக்க நன்றி!

ஆ.சுதா June 23, 2009 at 7:05 PM  

மயாதி said...
நல்லாருக்கு தல


நன்றி மயாதி.

ஆ.சுதா June 23, 2009 at 7:17 PM  

வாங்க செல்வேந்திரன். மகிழ்ச்சி!

இந்த கவிதை 'முடியலத்துவத்தல' வரலையா!!
கவிதை ஒரே உண்ரவு.
நானும் பொடியன்தாங்க...! (எழுத்துல)


நீங்க என் கவிதையை படித்து ரசித்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.
மிக்க நன்றி செல்வான்ணா.

ஆ.சுதா June 23, 2009 at 7:18 PM  

வினோத்கௌதம் said...
என்ன சொல்லுறது நாள் ஆக ஆக மெருகு ஏறிக்கிட்டு போகுது உங்கள் வரிகள்..

எல்லாம் உங்க வார்த்தைகளும் ஊக்கமும்தான் நண்பா!
ரொம்ப நன்றி கௌதம்.

ஆ.சுதா June 23, 2009 at 7:19 PM  

ஷண்முகப்ரியன் said...
கவிதை உங்கள் கைக்குள்.
வாழ்த்துக்கள்.


நன்றி ஷண்முகப்பிரியன் சார்.

ஆ.ஞானசேகரன் June 23, 2009 at 8:17 PM  

//இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.///

ஹிஹிஹி..

ஆ.ஞானசேகரன் June 23, 2009 at 8:18 PM  

//கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.//

நல்ல வரிகள்

குடந்தை அன்புமணி June 23, 2009 at 10:09 PM  

மூன்றும் முத்துக்கள், முத்து! காட்சிகள் கண்முன் விரிகின்றன. யதார்த்தமான கவிதைகள். வாழ்த்துகள்!

ஆ.சுதா June 23, 2009 at 11:11 PM  

ஆ.ஞானசேகரன் said...
//கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.//

நல்ல வரிகள்

நன்றி ஞானசேகரன்.

நன்றி அன்புமணி

geevanathy June 24, 2009 at 2:49 AM  

///சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.///


கவிமொழி நன்றாக இருக்கிறது
தொடருங்கள் நண்பனே

sakthi June 24, 2009 at 2:57 AM  

கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.


அருமை ரசித்தேன் இவ்வரிகளை.....

கவிதைகள் அனைத்தும் அழகு

ஆ.சுதா June 24, 2009 at 3:12 AM  

நன்றி ஜீவராஜ்
நன்றி சக்த்தி

யாத்ரா June 24, 2009 at 12:56 PM  

கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு முத்து. அருமை. ரயில் எனக்கும் மிக நெருக்கமானது.

ப்ரியமுடன் வசந்த் June 24, 2009 at 2:14 PM  

எல்லாமே சிந்தைகளின் வித்துக்களாக

வாழ்த்துக்கள் சிறந்த கவிதைக்கு

ஆ.சுதா June 24, 2009 at 7:34 PM  

நன்றி யாத்ரா
நன்றி வசந்த்

காமராஜ் June 25, 2009 at 6:54 AM  

ரயில் இன்னும் தீராத வினோதம்.
கவிதை மேலும் அதிக ஈர்ப்பைக் கொடுக்கிறது
கவிதையின் இழுவிசையில் பின் தொடர்கிறது.

அருமை

நந்தாகுமாரன் June 25, 2009 at 7:12 AM  

முதல் கவிதையும், ரெண்டாம் கவிதையும் பிடித்தது ... உங்கள் கவிமொழி என்னைக் கவர்கிறது ... ரயில் பயணத்தில் எழுதிய என்னுடைய ‘உறக்க விதி’ கவிதை நினைவிற்கு வந்தது ...

ஆ.சுதா June 25, 2009 at 10:32 AM  

நந்தா, காமராஜ் அவர்கள் இருவருக்கும் நன்றி,

பிரவின்ஸ்கா June 26, 2009 at 10:12 AM  

//அருகாமையில் வந்த இரயிலை
கவிழ்த்து விடும் துணிச்சலுடன்
சிறகுகளை வீசிக் கடந்து செல்கின்றது //

நல்ல கவிதைகள்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

"உழவன்" "Uzhavan" June 26, 2009 at 10:24 PM  

//இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.//

இயல்பான வரிகள். அனைத்துமே அருமை.

ஆ.சுதா June 27, 2009 at 7:49 AM  

நன்றி பிரவின்ஸ்கா
நன்றி உழவன்

விநாயக முருகன் June 30, 2009 at 5:58 AM  

வாழ்த்துக்கள். I have read in Uyirosai

ny June 30, 2009 at 8:59 AM  

uyirmmai super fan'taste'ic!!

ஆ.சுதா June 30, 2009 at 7:02 PM  

வாழ்த்துக்கு மிக்க நன்றி விநாயகமுருகன், கார்த்தி

கே.பாலமுருகன் July 1, 2009 at 3:52 AM  

உயிரோசை வலைத்தளத்தில் உங்களின் இந்தக் கவிதையை வாசித்தேன். மனம் வரிகளில் காதல் கொண்டது.
வெகுநாட்களுக்கு பிறகு ஒரு காதல் கவிதையை வாசித்தது போன்ற மனநிலை ஏற்பட்டது.

ஒவ்வொருவரும் இரயில் சினேகிதம் என்பதை ஒரு ஒப்புவுமையாக வாழ்வு முழுவதும் உரையாடிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். ஒரு மலம்கழிப்பவன் போல, தாற்கொலைக்கு அங்கு வருபவன் போல், பறக்கும் பறவை போல, இரயிலிருந்து நம் உருவத்தைக் கைகளில் பிடிக்க முற்படும் குழந்தைகள் முதல், இது ஒரு காதல் கதையாக நீள்கிறது தண்டவாளம் முழுக்க.
வாழ்த்துகள் நண்பரே.

கே.பாலமுருகன்
மலேசியா

இரசிகை July 8, 2009 at 10:36 PM  

2vathu azhagu!!

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP