உணர்வீர் வஞ்சப்புகை நெடி!

Monday, January 31, 2011

இரசிக்கம் பழகிவிட்டோம்
தொட்டி மீண்களையும் - சவப்
பெட்டி மீனவனையும்.

**

'சூரியனின் உதயத்தில் கடல்
செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை
அது மாயை நன்கு உற்றுப் பாருங்கள்
அது எங்கள் மீனவர்களின் குருதி.

**

கடிதமும் அறிக்கையும் கண்துடைப்பும்
போதும்... கொஞ்சம் எங்கள் கடற்கரைக்கு வாருங்கள்
தோட்டாவின் வஞ்சப்புகை நெடி உங்கள் நாசியை
துளைத்துச் செலவதை உணர்வீர்கள்!
கொஞ்சம் கால் நனைத்துப் பாருங்கள் உங்கள்
கால்களை சுற்றி நிற்கும் ஒரு தாலி கயிற்!
கொஞ்சம் எடுத்துப் பருகிப் பாருங்கள் உரைக்கும்
எங்கள் கண்ணீரின் சுவை!
கொஞ்சம் காது வைத்துக் கேளுங்கள்... கேட்கும்
ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் எங்கள்
அழுகை!!

**

5 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் February 1, 2011 at 8:03 AM  

தங்களை மீண்டும் பதிவுலகில் பார்த்ததில் மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள் தோழரே!

ஆதவா February 2, 2011 at 12:59 AM  

மீனவ கவிதைகள் வலியைத் தருகின்றன!!
நீண்ட நாள் கழித்து உங்கள் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்!

எழுத்துப் பிழைகளைக் களையுங்கள்!!

குடந்தை அன்புமணி February 16, 2011 at 9:53 PM  

மீனவர்களின் நிலையில்லா வாழ்க்கையை பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை.
பதிவுலகில் நீண்ட இடைவெளி...
தொடர்ந்து எழுதுங்கள். முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்த்தோட்டம் September 11, 2011 at 9:29 PM  

அருமையான கவி மழை பாராட்டுக்கள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் June 15, 2014 at 5:54 AM  

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

விடைபெறுமுன்...

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP