மீன் தொட்டி. >மூன்று கவிதைகள்

Thursday, June 25, 2009


உன் அருகாமை வெப்பத்தை
பருகி மூச்சடைத்துக் கிடக்கின்றேன்
வலியின்றி பிய்த்து போடுகின்றாய்
சிறகுகளை.
விழி அரும்பும் நீர்த்துளியென
ஆசைகள் ததுப்பி வழிய
உன் விரல் தொட்டழித்து
வெட்கத்தை ஊற்றி விடுகின்றாய்
மழையில் அழியும் தெருவோவியமாய்
கரைந்து கொண்டிருக்கின்றேன்
நாள் முழுதும்.
--*--நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.
….
எப்படி எடுத்துச் செல்வது
பிரிகையில்…!
--*--


மீன் தொட்டியிலிருந்து துள்ளி விழுந்த
சிறு மீனாய் உன் விழிகளுக்குள் விழுந்து
கிடக்கின்றது என் இரவும் பகலும். நீ
என்னை அழைத்து சென்று கொண்டே
இருக்கின்றாய் நானறியா வனமொன்றில்
வேட்டை மானனெ.
--*--

:- கொஞ்சம் ரிலாக்ஸ்..........!

34 comments:

ஆ.ஞானசேகரன் June 25, 2009 at 5:50 PM  

மூன்றும் ரசிக்கும்படி உள்ளது நண்பா

மாதவராஜ் June 25, 2009 at 6:59 PM  

அருமை.
இரண்டாவது கவிதை மிகவும் கவர்ந்தது.

ஆ.முத்துராமலிங்கம் June 25, 2009 at 7:08 PM  

நன்றி ஆ.ஞானசேகரன்.
நன்றி மாதவராஜ் சார்.

ஜெகநாதன் June 25, 2009 at 7:20 PM  

எல்லா கவிதைகளும் எளிமையாய் புரியும்படி இருக்கின்றன. மீன்​தொட்டி அருமை.

பிரியமுடன்.........வசந்த் June 25, 2009 at 7:50 PM  

மூணும் முத்தாய்.....

எளிமையா புரிஞ்சது முத்து

மயாதி June 25, 2009 at 7:51 PM  

ரெண்டாவது கவிதை டாப்பு தலைவா !

ஆ.முத்துராமலிங்கம் June 25, 2009 at 7:52 PM  

வாங்க ஜெகநாதன் கவிதையை படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி.

ஆ.முத்துராமலிங்கம் June 25, 2009 at 7:52 PM  

நன்றி வசந்த்
நன்றி மயாதி

காமராஜ் June 25, 2009 at 8:01 PM  

மிக அருமையான தொட்டிகள் மூன்றும்.
இறுக்கத்தை சேகரித்து வைத்திருக்கிற,
அழகிய மிக அழகிய கவிதைகள்.

Anonymous June 25, 2009 at 8:32 PM  

வெகுவாய் இருந்தது வேட்கைகள் மூன்றும்...

ஆ.முத்துராமலிங்கம் June 25, 2009 at 8:33 PM  

நன்றி காமராஜ் சார்,
நன்றி தமிழரசி

த‌மிழ் June 25, 2009 at 10:01 PM  

இரண்டாவது கவிதை எளிமையாய் ரசிக்கும்படி உள்ளது..

ஜெஸ்வந்தி June 26, 2009 at 1:10 AM  

//நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.//

Beautiful lines. well done.

குடந்தை அன்புமணி June 26, 2009 at 3:03 AM  

மூன்று கவிதைகளும் எளிமையாய் இருக்கிறதென்றாலும், முதலிரண்டு கவிதை மிகவும் அருமை. அதிலும் ரொம்ப பிடித்தது இரண்டாவதுதான். வாழ்த்துகள் முத்து. (வரும் ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு தி.நகர் நடேசன் பூங்காவில் நடைபெறும் பதிவர் சந்திப்புக்கு வர மறந்துவிடாதீர்கள்...)

ஆ.முத்துராமலிங்கம் June 26, 2009 at 4:54 AM  

நன்றி தமிழ்.
நன்றி ஜெஸ்வந்தி
நன்றி அன்புமணி (வரும் ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு தி.நகர் நடேசன் பூங்காவில் நடைபெறும் பதிவர் சந்திப்புக்கு வர மறந்துவிடாதீர்கள்...) கண்டிப்பா!!

பிரவின்ஸ்கா June 26, 2009 at 10:08 AM  

மூன்றும் அருமை .
ரசித்தேன்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ஆ.முத்துராமலிங்கம் June 26, 2009 at 8:17 PM  

நன்றி பிரவின்ஸ்கா

tom June 26, 2009 at 9:53 PM  

vaalthukkal sir,

உயிரோடை June 26, 2009 at 10:13 PM  

//நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்//

அருமை நண்பரே. நல்லா எழுதறீங்க மேலும் எழுதுங்க.

வாழ்த்துக்கள்

Nundhaa June 27, 2009 at 12:18 AM  

முதல் கவிதை பிடித்தது

நேசமித்ரன் June 27, 2009 at 6:55 AM  

முதல் கவிதை பேரழகு..

ஆ.முத்துராமலிங்கம் June 27, 2009 at 7:47 AM  

நன்றி tom
நன்றி உயிரோடை
நன்றி நந்தா
நன்றி நேசமித்ரன்.

sakthi July 2, 2009 at 4:43 AM  

நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.

a wonderful one

தமிழ்ப்பறவை July 3, 2009 at 9:21 AM  

தலைவரே... உங்கள் பக்கம் அடிக்கடி வந்ததில்லை..இன்று வந்தேன்.
மூன்று கவிதைகளும் உங்கள் வலைப்பூவுக்கு ஆயுள் சந்தா எடுக்கச்செய்து அனுப்பிவிட்டன.
லேபிளில் ‘கொஞ்சம் ரிலாக்ஸ்’ போட்டிருந்தீர்கள். ரொம்பவே ரிலாக்ஸானேன்.
மூன்றும் அழகு...

மன்னிக்கவும்..சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருக்கின்றன..திருத்தினால் மிகச்சிறப்பாய் இருக்கும்...

ஆ.முத்துராமலிங்கம் July 3, 2009 at 9:31 AM  

நன்றி சக்தி.
நன்றி தமிழ்ப்பறவை. ரொம்ப சந்தோசம் உங்கள் வாழ்த்து. பிழைகள் உணருகின்றேன்.

இரசிகை July 8, 2009 at 10:31 PM  

arumai..

ஹேமா July 9, 2009 at 3:46 AM  

"தொடர்"வண்டி கவிதைகள்,"மீன் தொட்டி" கவிதைகள் வாசித்தேன்.பிந்தி வாசித்தாலும் தன் வசத்தை இழக்காத அருமையான கவிதைகள்.

மண்குதிரை July 17, 2009 at 1:55 AM  

nalla irukku ramalingkam

ஆதவா July 20, 2009 at 8:22 AM  

மூன்றுமே பிரமாதம் ஆ.முத்துராமலிங்கம்.

இரண்டாம் கவிதை வெகு அழகு!!!

விமர்சனமெழுதி நேரமழிப்பதை விடவும்.... கவிதையை ரசித்துக் கொண்டே இருத்தல் சுகம்!

அன்பின்
ஆதவா

பிரவின்ஸ்கா July 23, 2009 at 10:27 AM  

Please visit Here.

http://pravinska.blogspot.com/2009/07/blog-post_23.html

There is a small gift for you.

- Piriyamudan,
pravinska

Saravana Kumar MSK July 24, 2009 at 11:06 AM  

அருமையான கவிதைகள்.

பதிவுகளுக்கு லீவு விட்டுட்டீங்களா? ஆளையே காணோம்.
அடுத்த பதிவு போடுங்க பாஸு.

நேசமித்ரன் August 3, 2009 at 7:11 AM  

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி September 15, 2009 at 12:08 AM  

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கு.http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post_14.html#links

ஆதி February 25, 2010 at 5:19 AM  

//நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.
….
எப்படி எடுத்துச் செல்வது
பிரிகையில்…!//

ஒரு கனம் தெரியா உணர்வை மனதிலுள் பரவவிட்ட வரிகள் இவை..

அருமையான வரிகள், பாராட்டுக்கள்..

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP