மூன்று கவிதைகள்

Thursday, May 28, 2009

தலைபற்ற இரண்டுக் கவிதை

நீ விரட்டிய
பிரகாரப் புறாக்கள்
வட்டமடித்து விட்டு
மீண்டும் வந்தமருகின்றது
உன் விரட்டலை யாசகம்
பெற.
நீ மீண்டும் கைகளை வீசுகின்றாய்
உன்னில் விரிந்து மறைகின்றது
ஒரு பறவையின் சிறகு.
-*-

உன் சுவடுகளைப் பின்பற்றி
நடக்க துவங்குகின்றேன்
நீண்டுச் செல்லும் உன் பாதை
என்னை குழந்தையாக்கி கூட்டிச்
செல்கின்றது.
நான் பருவங்களை இழந்து
பின்னோக்கி தவழத் துவங்குகையில்
உன் சுவடுகளை அழித்தபடி
என்னை முந்திச் செல்கின்றது மழை.
-*-

கொக்கு
அதன் வென்மை நிரம்
இயல்பாகவே பிடித்த ஒன்று
நீண்ட கால்களும் வளைந்த கழுத்தும்
புரியாததொரு கேலித்தளுடன் அதை
ரசிக்கச் செய்து விடும் எப்பொழுதும்.
மேலும் கீழுமாக ஏறிஇறங்கிச் செல்லும்
அதன் நடை பார்க்கச் சலிக்காதொன்று.
நீண்ட நேரம் காத்து நின்று
சட்டென்று ஒரு கனத்தில் வெகு லாவகமாக
நீந்தியலைந்த மீனொன்றை கொத்திப்
பறந்துச் செல்லும் அதன் சாமர்த்தியத்தை
விழி மூழ்கி ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
துடிதுடித்து இறந்துக் கொண்டிருக்கின்றது
அதன் கூரிய நகத்துக்குள் அகப்பட்டிருந்த மீன்.


28 comments:

நாடோடி இலக்கியன் May 29, 2009 at 12:35 AM  

அருமை.
முதல் கவிதையை வெகுவாக ரசித்தேன்.

பிரியமுடன்.........வசந்த் May 29, 2009 at 1:25 AM  

கொக்கு
கவிதை
நன்று

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 1:51 AM  

நன்றி நாடோடி இலக்கியன்,
உங்கள் வருகையும் ரசனையும் எனக்கு மகிழ்ச்சி.

----===------

நன்றி பிரியமுடன்....வசந்த்,

ஆ.ஞானசேகரன் May 29, 2009 at 3:00 AM  

மூன்று இயற்கையாக இருக்கு நண்பா,
//விழி மூழ்கி ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
துடிதுடித்து இறந்துக் கொண்டிருக்கின்றது
அதன் கூரிய நகத்துக்குள் அகப்பட்டிருந்த மீன்.//

நானும் ரசித்த இடம்...

அன்புடன் அருணா May 29, 2009 at 3:57 AM  

முதல் கவிதை பிடித்தது...
அன்புடன் அருணா

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 4:36 AM  

வாங்க ஞானசேகரன்,
இயற்கையில்தானே ரசனை உள்ளது,
உங்கள் ரசனைக்கு நன்றி.

---===--

அன்புடன் அருணா said...
முதல் கவிதை பிடித்தது...
அன்புடன் அருணா

நன்றிங்க அருனா

அமிர்தவர்ஷினி அம்மா May 29, 2009 at 4:43 AM  

மூன்று கவிதைகளுமே அருமை

கொக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 4:52 AM  

அமிர்தவர்ஷினி அம்மா said...
மூன்று கவிதைகளுமே அருமை

கொக்கு மிகவும் பிடித்திருந்தது.

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, உங்கள் வரவும் பிடித்திருந்ததும் ரொம்ப மகிழ்ச்சியை தருகின்றது.

ஆதவா May 29, 2009 at 6:12 AM  

மூன்று கவிதைகளுமே பிடித்திருக்கிறது ஆ.முத்துராமலிங்கம். முதல் கவிதையில் விளக்கியிருக்கும் காட்சி கவிதைத்தனமானது. விரிந்த கைகளில் ஒளிந்திருக்கும் அந்த கவிதைத்தனமான வரிகள், மிகவும் பிடித்திருக்கிறது.

இரண்டாம் கவிதையும் காட்சிகளாகவே நகருகிறது. மெல்லிய காதல் ஓடுகிறது. சுவடுகளை அழித்தபிறகு அவன் என்னாவான் என்று யோசிக்கிறேன். மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவானா? அல்லது சுவடுகளைத் தேடுவானா? கவிதை அபாரம்.

கொக்கு கவிதை ஆரம்பத்தில் கொக்கை வர்ணிப்பது போலச் சென்று திடீரென்று திசை திரும்பியதைப் போன்று முடிந்துவிட்டது. கொக்குக்கு பதிலாக சூழ்நிலைகளை விவரித்திருக்கலாம் என்பது என் எண்ணம்.. அதைவிடுத்து..... அழகான விவரணைகள். கொக்கு ஒன்று அமர்ந்து கவிதையைக் கொத்தியது போல இருக்கிறது!!!!

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 7:37 AM  

வாங்க ஆதவா, உங்கள் ரசிப்ப அலாதியாகனது. கவிதையின் உட்புகுந்து அதன் படிமங்களை நன்கு அலசுகின்றீர்கள். உங்கள் ஒவ்வொரு வரியும் என்னை ஊக்கமளிக்கச் செய்கின்றது.

மூன்றாவது கவிதை.. அப்படியும் யோசித்திருக்கலாம் என்ன.. நீங்க சுட்டி காட்டிய பின்தான் அப்படியிருந்தால் இன்னும் நல்லா வந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

நன்றி ஆதவன்.

vinoth gowtham May 29, 2009 at 7:56 AM  

//நான் பருவங்களை இழந்து
பின்னோக்கி தவழத் துவங்குகையில்
உன் சுவடுகளை அழித்தபடி
என்னை முந்திச் செல்கின்றது மழை.//

நான் ரசித்த இடம்..

அருமை..

கே.ரவிஷங்கர் May 29, 2009 at 7:24 PM  

எல்லா கவிதைகளும் நன்று. முதல் கவிதை over romance?

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 7:31 PM  

நன்றிங்க கே.ரவிஷங்கர்

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 7:36 PM  

நன்றி வினோத்.

Anonymous May 29, 2009 at 8:17 PM  

ஆஹா....காதலில் தான் எத்தனை அழகு கற்பனைகள் பிறக்கின்றன...தூதாய் சென்ற புறாக்களோ......


உருவம் மாறினாலும் உள்ளம் மாறாக் உண்மைக்காதல்......

ஒரு அழகில் ஒளிந்திருந்த வன்மம் தான்....கொக்கும் மீனும்....

நல்ல கவிதைகள்ப்பா....

மாதவராஜ் May 29, 2009 at 9:11 PM  

நண்பரே!

உங்கள் கவிதைகளை வாசிக்கத் துவங்கினேன். சிறப்பாக இருக்கிறது. எனது blog listல் சேர்த்துக் கொள்கிறேன். விரிவான கடிதம் உங்களுக்கு எழுதுவேன்.

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 10:10 PM  

வாங்க தமிழ்.
காதலை பற்றி எவ்வளவு சொல்லியும் தீர்ந்து போவதில்லை காதல் ஊற்றெடுத்து வற்றாது ஓடிக் கொண்டே இருக்கின்றது..

ஒரு அழகில் ஒளிந்திருந்த வன்மம் தான்....கொக்கும் மீனும்....

நல்ல கவிதைகள்ப்பா....

நன்றிங்க தமிழ்,

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 10:13 PM  

மாதவராஜ் said...
நண்பரே!

உங்கள் கவிதைகளை வாசிக்கத் துவங்கினேன். சிறப்பாக இருக்கிறது. எனது blog listல் சேர்த்துக் கொள்கிறேன். விரிவான கடிதம் உங்களுக்கு எழுதுவேன்.

மிகுந்த மகிழ்சியாக உள்ளது மாதவராஜ் சார். உங்கள் கடிதத்தை
எதிற்பார்கின்றேன்.

த.ஜீவராஜ் May 30, 2009 at 3:58 AM  

மூன்று கவிதைகளுமே அருமை

///உன்னில் விரிந்து மறைகின்றது
ஒரு பறவையின் சிறகு.///

வெகுவாக ரசித்தேன்.

தமிழ்ப்பறவை May 30, 2009 at 11:04 AM  

மூன்று கவிதைகளும் அருமை நண்பரே...
முதல் கவிதை வெகு இயல்பு...அழகுணர்ச்சி அதிகம்...
வாழ்த்துக்கள்...

ஆ.முத்துராமலிங்கம் May 30, 2009 at 11:06 AM  

நன்றிங்க த.ஜீவராஜ், தமிழ்ப்பறவை.

சேரல் May 31, 2009 at 9:13 PM  

மூன்று கவிதைகளுமே அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.முத்துராமலிங்கம் May 31, 2009 at 10:20 PM  

வணக்கம் சேரல் அவர்களே.
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

புதியவன் May 31, 2009 at 11:37 PM  

//நீ மீண்டும் கைகளை வீசுகின்றாய்
உன்னில் விரிந்து மறைகின்றது
ஒரு பறவையின் சிறகு.//

மிக அற்புதமான வரிகள் முத்துராமலிங்கம்...

புதியவன் May 31, 2009 at 11:41 PM  

தலைபற்ற இரண்டுக் கவிதையில் இரண்டாவது கவிதையும் அழகு...

கொக்கு கவிதை இயல்பான வரிகளில் மிளிர்கிறது

ஆ.முத்துராமலிங்கம் June 1, 2009 at 2:57 AM  

வாங்க புதியவன், வணக்கம்!!
புதிய தளத்தை கண்டு பிடிச்சிட்டாங்களா ரொம்ப நன்றிங்க.

ரசனைக்கு வெகுவான நன்றிகள்
நண்பரே!

நவநீதன் June 9, 2009 at 1:02 PM  

//உன் விரட்டலை யாசகம்
பெற.//

பாஸ்....நமக்கு இதுதான பொழப்பே :-)

kartin June 13, 2009 at 8:42 PM  

முதல் கவிதையிலேயே
மூழ்கிப் போய் விட்டேன் :))

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP