தொலையும் நான்………. தொலைவில் நீ!

Saturday, May 23, 2009


உன் தொலைபேசி
அழைப்பிற்க்காக
காத்திருக்கின்றேன்.

வேகு நேரமாகியும்
உன் அழைப்பின்றி
அதிர்ந்து நொருங்குகின்றது
மனம்.

பிறகு உன் அழைப்பொலி
கேட்டு வேகமெடுத்த தொடர்
வண்டியைப்போல் இதயத்துடிப்பின்
வேகம் உயர்ந்து சுற்றமும் மங்களாய்
மறைந்தோடுகின்றது.

நடுங்கும் விரல்களை
நிறுத்த முடியாமல்
தடுமாறி எடுக்கின்றேன்
முந்தகூவியை.

எதிர்முனையில் நீ
எப்போதும் போல்
நிதானமாய் சிரிக்கின்றாய்.

என்காதுகளில் வந்து
விழுகின்றது உன் சிரிப்பொலி
பனிக்கட்டியை தூளாக்கியது போல்

ஒலி கடத்தும் ஊடகம்
முதன் முதலில் குளிர்
கடத்துகின்றது உன்னால்.

உனக்காக வைத்திருந்த
வார்த்தைகளனைத்தும்
உதிர்ந்து ஊமையாகி
நிர்கின்றேன் எப்போதும் போல.

எல்லாம் பேசிமுடிந்து
நம் தொடர்பை துண்டிக்கின்றாய்
உயிரின் ஓரத்தில் வலிக்கின்றது.

மீண்டும்
நினைத்துக் கொண்டேன்
உன் அடுத்த அழைப்பிலாவது
நான் தொலைந்து போகாமலிருக்க
வேண்டுமென.

4 comments:

குடந்தை அன்புமணி July 15, 2009 at 10:30 PM  

//ஒலி கடத்தும் ஊடகம்
முதன் முதலில் குளிர்
கடத்துகின்றது உன்னால்.//

ஆகா... ஆகா... சூப்பரு.

குடந்தை அன்புமணி July 15, 2009 at 10:31 PM  

//மீண்டும்
நினைத்துக் கொண்டேன்
உன் அடுத்த அழைப்பிலாவது
நான் தொலைந்து போகாமலிருக்க
வேண்டுமென.//

காதலில் விழுந்த பிறகு நானாக எப்படி இருப்பது?

குடந்தை அன்புமணி July 15, 2009 at 10:33 PM  

முந்தகூவி- தொலைபேசியைத்தான் அப்படி சொல்கிறீர்களா? எங்கேர்ந்து பிடிச்சீங்க?

நிர்கின்றேன் - நிற்கின்றேன். திருத்தவும்.

R.Selva March 22, 2014 at 7:36 PM  

அருமை.....

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP