விசித்திரி.

Tuesday, May 26, 2009



நேர்த்தியாக வரைபப்பட்ட ஓவியமொன்றின்
முதல் கோடுத் தேடி பயணிக்க துவங்குகின்றேன்.
வர்ணங்களில் சிதைந்திருக்கும் பிம்பங்கள்
ஒவ்வொன்றாய் மீட்டெடுத்துச் செல்கையில்
இழந்து கொண்டே வருகின்றேன் என் முகங்கள்
ஒவ்வொன்றாய். மலை உச்சியிலிருந்து விழும்
அருவியின் பேரிரைச்சல் தற்கொலைக்கான
காரணங்களை சத்தமாகக் கூறுவதாகவும்
உதிரந்த சருகுகளின் சரசரப்புகள் வாழ்தலின்
பிசுருகளாக நீங்கிவிட்ட ஏக்கங்களை
முனுமுனுப்பதாகவும் பசித்தக் குழந்தையின்
வீங்கிய கன்னமும் முலையொட்டிய ஒரு தாயின்
கண்ணீரும் வெவ்வேறு வண்ணங்களில் படிந்திருப்பதை
எச்சில் கொண்டு அழித்து விடுகின்றேன்.
கூடு விட்டு வெகுதூரம் இரைத் தேடிச் செல்லும்
பறவையின் தவிப்பை சிறகுகளின் கீழான
சிறுக் கோடு காட்டிவிடுகின்றன.
இன்னும் என் பயணத்தை நீட்டியிருக்கையில்
காடு மலை நதி கடல் என கடந்துச்
செல்கின்றது. எதிலும் என் தேடுதலுக்கான
முடிதலின்றி முடிவற்று நிர்க்கையில் காலடியில்
விரியத் துவங்குகின்றதொரு வர்ணங்களற்ற வெளி.
நான் துவக்கத்தை கண்டெடுக்க முடியாதவனாய்
திரும்புக் கொண்டிருக்கின்றேன் வர்ணங்களப்பிய
மேனியுடன் அழிந்திருந்த ஓவியத்திலிருந்து
உயிர் பெற்றவனாய்.

12 comments:

sakthi May 26, 2009 at 6:27 PM  

நான் துவக்கத்தை கண்டெடுக்க முடியாதவனாய்
திரும்புக் கொண்டிருக்கின்றேன் வர்ணங்களப்பிய
மேனியுடன் அழிந்திருந்த ஓவியத்திலிருந்து
உயிர் பெற்றவனாய்.

பின் நவீன முயற்ச்சியா முத்து

வாழ்த்துக்கள் அருமை

Unknown May 26, 2009 at 7:01 PM  

நல்லா இருக்கு.

//கண்ணீரும் வெவ்வேறு வண்ணங்களில் படிந்திருப்பதை
எச்சில் கொண்டு அழித்து விடுகின்றேன்//

அழகு.

ஆ.ஞானசேகரன் May 26, 2009 at 11:37 PM  

//நான் துவக்கத்தை கண்டெடுக்க முடியாதவனாய்
திரும்புக் கொண்டிருக்கின்றேன் வர்ணங்களப்பிய
மேனியுடன் அழிந்திருந்த ஓவியத்திலிருந்து
உயிர் பெற்றவனாய்.//

நல்ல வரிகளால்ல்ல்ல்ல்ல் அருமையா இருக்கு நண்பா

Anonymous May 27, 2009 at 3:40 AM  

நேர்த்தி நேர்த்தி நேர்த்தி .....முதல்ல கைகுடுங்க....எப்படி இத்தனையும் கொண்டு வர முடிந்தது...கடைசிவரி எங்கியோ போய்டீங்க முத்து.....வலியோடு தான் நகரமுடிகிறது.....பசித்த குழந்தையின் வீங்கிய கன்னம் முலையொட்டிய தாயின் கண்ணீர்....வலிக்காமல் எப்படியிருக்கும்?

ஆதவா May 27, 2009 at 10:38 AM  

காலையில் இதற்கு நானெழுதிய பதிவைக் காணவில்லைய்????

ஆதவா May 27, 2009 at 10:44 AM  

மிக அற்புதமான எழுத்துக்கள் ஆ.முத்துராமலிங்கம்.. மிக வித்தியாசமான கற்பனை.

அகநாழிகையிடம் சொல்லியிருந்தேன். இரண்டு "ஓவிய" கதைகள் இருக்கின்றன என்று... தற்சமயம் ஒரு ஒவியக் கவிதையொன்றை விகடனில் படித்தேன்... ஜூஜூ ஓவியமொன்றை பதிவுக்காக வரைந்தேன்..... இப்பொழ்டுது உங்கள் கவிதை....

இந்த இரு நாட்களில் ஓவியத்திற்கும் எனக்குமான தொடர்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் கூறிய விதம் வெகு அற்புதம்.. பின்னவீனத்துவம் என்று வகைபிரிக்கப்படும் இவ்வகை கவிதையில் ஒருசிலதான் சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்ளும்.. இதுவும் அப்படித்தான்.

வர்ணங்கள் அப்பி உயிர்பெறும் பொழுது மீட்கமுடியாத துயரிலிருந்து வெளியேறுவதைப் போன்று உணர்வு ஏற்பட்டது!!!

வாழ்த்துக்கள் ஆ.முத்துராமலிங்கம்..

வினோத் கெளதம் May 27, 2009 at 11:33 PM  

மிக நேர்த்தியான வரிகள்..

ஆதவா May 28, 2009 at 3:44 AM  

இந்த கவிதைக்கு ஏன் குறைவான பின்னூட்டங்களே கிடைத்திருக்கின்றன.... ??

ஆ.சுதா May 28, 2009 at 9:13 AM  

நன்றி சக்தி,கே.ரவிஷங்கர், ஆ.ஞானசேகரன், தமிழரசி, மற்றும் ஆதவா அனைவருக்கும் என் நன்றிகள்.

வேலை பளு காரணமாக உடனே வந்து நன்றி சொல்ல முடியவில்லை

ஆ.சுதா May 28, 2009 at 9:16 AM  

ஆதவா said...
காலையில் இதற்கு நானெழுதிய பதிவைக் காணவில்லைய்????

அது தமிழீசில் பதிந்திருந்தீங்க ஆதவா.

ஆதவா said...
இந்த கவிதைக்கு ஏன் குறைவான பின்னூட்டங்களே கிடைத்திருக்கின்றன.... ??

நிறைய நண்பர்களுக்கு சென்றிருக்காது இல்லைனா என்னை போல வேலை பளு காரணமா இருக்கலாம் ஆதவா. (அதுவும் இல்லனா கவித பிடிக்காம போயிருக்கலாம்)

ஆதவா May 28, 2009 at 10:20 AM  

இந்த கவிதையை யாருக்கும் பிடிக்காமல் போகாது ஆ.முத்துராமலிங்கம். படிக்காமலேயே எப்படி பிடிக்காமல் போகும்??

நீண்ட நாட்களாகவே நான் கவனித்துதான் வருகிறேன்!!!

ப்ரியமுடன் வசந்த் May 29, 2009 at 1:33 AM  

அய்யோ அய்யோ நமக்கு இந்த மாதிரி ரசனை வர மாட்டேனுதே...

நல்லாயிருக்கு முத்து

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP