மழையனப் பெய்தாய் நீ…! - 3

Saturday, May 23, 2009


உன் காதலில்
நான்
ஊஞ்சலாடுகின்றேனா…?
ஊசலாடுகின்றேனா…?!

-----*-----

உன் அறிமுகத்தில்
விடைப்பெற்றுக் கொண்டது
என்
அமைதி.

-----*-----

உன்னைப் பற்றியே
சிந்தித்து சிந்தித்து
எனக்கு நானே
அன்னியமாகிவிட்டேன்.

-----*-----

மூழ்கிக் கொண்டே
இருப்பேன் - உன்
கரம் பற்றும் வரை!

-----*-----

உன்
புன்னகையைத் தோண்டினால்
கண்டுப்பிடிக்கப் படலாம்
காணாமல் போன
பலரது இதயம்!

-----*-----

வார்த்தைகளற்ற மொழி….
உன் மௌனம்
வாக்கியமற்ற கவிதை….
உன் புன்னகை.

-----*-----

கல்லுடைக்கும்
தொழிலாலியின் கடைசி
நிமிட பரபரப்பை போல்
நீ
பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும்
நான்.

-----*-----என் வயதுகளில்
சிலவை வெற்றிடங்களாகவே
இருப்பதை பற்றி
என் பிள்ளைகள் என்னிடம்
கேட்குமாயினில்
நான் என்ன பதில் சொல்வது

வெற்றிடம் முழுவதும்
வியாபித்திற்கும் உன்னைப் பற்றியா?
வெற்றிடமாக தோற்றமலிக்கும்
நம் காதலைப் பற்றியா?

-----*-----

2 comments:

sakthi May 24, 2009 at 1:58 AM  

உன்
புன்னகையைத் தோண்டினால்
கண்டுப்பிடிக்கப் படலாம்
காணாமல் போன
பலரது இதயம்!

asathal varigal

இரசிகை July 9, 2009 at 4:24 AM  

aththanaiyum azhagu:)

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP