யாரோ… அவள்

Saturday, May 23, 2009


டே! எறும எழும்புடா மணியென்னாவுது என்றபடி போகிறவாக்கில் காலால் உதைத்து எழுப்பி விட்டுச் சென்றான் வினாயகம்

9 மணிக்கெல்லாம் முதல் ஒரு சுற்று எழுந்து செய்வன செய்துவிட்டு பின்புதான் மீண்டும் படுத்தேன். மாத முதல் தேதி என்பதால் அந்த வாரம் முழுக்க வேளை பளு அதிகம். அந்த சடவில் அயர்ந்து தூங்கிவிட்டேன் இதோ நம்ம வினாயகம் உதைத்தபோதுதான் தூக்கம் களைந்தது.

சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையிலிருந்தே மணியை பார்த்தேன்
மணி 5.

அச்சச்சோ…. தீ நகருக்கு போக என்னியிருந்தேனே, திங்ககிழமையே திட்டம்போட்டது. இந்த மாதம் சம்பளம் வாங்கியதும் அம்மாவுக்கு ஒரு சேலையும் எனக்கு சிலதும் வாங்க வேண்டுமென்று. கொஞ்சம் முன்னாலே போனா நின்னு நிதானமா எடுக்கலாம் அப்படியே கூட நாளு பொன்னுங்களையாவது பார்த்து… ரசிச்சி… சிரிச்சி…. அப்படி இப்படி இந்த ஞாயிற்றுக்கிழமையை கலகலப்பா கழிச்சியிருக்கலாம். ப்ச் இப்படி தூங்கி கழிச்சிட்டியே சோம்பேரி சோம்பேரி என்று திட்டியது மனசு, மலமலவென குளித்து புறப்பட்டு வேகவேகமாக நடந்துகொண்டே ஓடினேன் பேரூந்து நிறுத்தம் நோக்கி. பேரூந்து நிறுத்தம் வந்து சேருகையில் மணி எப்படியும் ஆரை தாண்டியிருக்கும், மேற்கில் கட்டடங்களுக்கிடையில் சூரியன் மூழ்கிக்கொண்டிருந்தான். ஐந்…து நிமிடம் காத்திருந்தும் பஸ்ஸைக்காணோம் எரிச்சலாயிருந்தது. சற்று நேரத்தில் ஒரு நீச்சல் வீரனைப் போல் சாய்ந்து சாய்ந்து வந்தது ஒரு மிதவைப் பேரூந்து. கூட்டம் அதிகம் தான் வேறு வழி? எறிக்கொண்டேன், படியைத் தாண்டி செல்ல முடியவில்லை அங்கிருந்தே பயணச் சீட்டை பெற்றுக்கொண்டேன். அதன் பின் வந்த நிறுத்தத்தில் ஏறியவர்கள் என்னையும் சேர்த்து கூட்டத்தினுள் புகுத்திவிட்டனர், எவ்வளவு முயற்சி செய்தும் என் சொந்தகாலில் நிர்க்க என்னால் முடியவில்லை, வியர்வை பிசுபிசுத்த முதுகுகளுக்கு பின்னால் நின்று கொண்டு மூச்சிவிட முடியவில்லை தொண்டைக்குழியில் ஏதோ அடைத்தது, சகிக்க முடியாமல் வலதுபக்க இருக்கையின் கம்பியை பிடித்துக் கொண்டு அதில் அமர்ந்திருந்தவரை இடித்துக் கொண்டும் சன்னல் பக்கமாக முகத்தை நீட்டிக்கொண்டேன் காற்று சுகமாய் வந்தது.

இரண்டு மூன்று நிறுத்தங்களைக் கடந்ததும் கூட்டம் ஓரளவுக்கு குறைந்துவிட்டிருந்தது. என் அருகில் ஒரு முதியவரும் அவரைத் தாண்டி இன்னும் சிலரும் என் பின்னால் ஐந்தாறு பேரும் நின்றிருந்தனர். சன்னல் வழியாக சிலுசிலுவென வந்தக் காற்று மயிர்க் கால்கெலெங்கும் மயிலிரகாய் வருடிவிட்டுச் சென்றது அதில் ஒரு புது சுகானுபவத்தை உணர்ந்தேன். அப்பாடா…. என்றபடியே மூச்சை நன்கு உள்ளிளுத்து விட்டுக் கொண்டு என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் என் அறிகில் நின்றிருந்த முதியவரும் சற்று தள்ளிப் போய்விட்டார் அப்போதுதான் தெரிந்தாள் அவள்… மேகம் விலகிய முழுமதியைப் போல் பிரகாசமாய். அப்படி ஒன்றும் ஆளைமயக்கும் பேரழகியல்ல ஆனால் நாம் சுற்றுலா சென்றுவிட்டு வந்த பின்பும் சில நாட்களுக்கு ஓர் இனம் புரியாத சுகம் நம் மனதில் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல மனதுக்குள் பனி தூவி பச்சைத் தீட்டியது அவளின் அளவான அழகு. சலனமற்ற முகம் நேர்த்தியானப் பார்வை அளவான பேச்சு காதுக்கு நேர் கீழ்கழுத்தில் ஒருமச்சம். பார்க்க பார்க்கா அவளின் வட்டபாதைக்குள் நின்று கொண்டது என் பார்வை.

அவள் அறிகில் இருந்தது அவள் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் அதான் அடக்கமாய் அமர்ந்திருந்தால். அவள் அம்மா எதேதோ பேசிக்கொண்டேயிருந்தால் அவளும் எதோ பதில் சொல்லி விட்டு புன்னகையுடன் முடித்தால், உதடு பிரியாத அவளின் அந்த சிரிப்பு என்னை மேலும் அவளிடம் ஈர்த்தது. அவள் ஜடையில் சிக்காத சில முடிகள் அவள் முகத்தில் சரிந்து விழுந்ததை அவ்வபோது சரிசெய்து கொண்டால் ஆனால் அவள் அழகில் சரிந்து கொண்டே இருக்கும் என் மனதை தடுக்க முடியவில்லை.

அவள் என்னுள் ஏதோ செய்தால்... ம் அப்படிதான் சொல்ல முடியும். என் கால்கள் தரையில் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை மேல் கம்பியை பிடித்திருந்த என் கைகள் ஏனோ அங்கும் இங்கும் இடம் மாறியது, இதயத் துடிப்பு கூட எப்போதும் போல் சாதாரன நிலையில் இல்லை வேகம் கூடியிருந்தது, என் உடலில் ஒரு மின்சார அலை பரவியிருந்ததை உணரமுடிந்தது.

இனிப்பைச் சுற்றும் எறும்பு போல் நான் அவளையே பார்ப்பதை எவரும் கவனித்து விடுவார்களோ என்ற சிறு அச்சம் எறும்பு போல் கடித்தது. அங்குமிங்கும் திரும்பி பார்த்துக் கொண்டேன் யாரும் என்னை கவனித்ததாய் தெறியவில்லை ஆனால் அவளை இருவர் கவனித்துக் கொண்டிந்ததை பார்த்தேன் மனம் அவர்களை வில்லன்களாக்கியது. அவர்கள் மூஞ்சில் ஓங்கி ஒரு குத்து விடனும் போலிருந்தது, ஒரு பொன்னு கொஞ்சம் அழகா இருந்திடக் கூடாத அப்படியே வச்ச கண் வாங்காம பார்ப்பாங்கள… மனம் மேலும் திட்டியது. இந்த நேரத்தில் பார்த்து சாலையில் எந்த தடங்களுமின்றி பேரூந்து விரசலாய் போய்கொண்டிருந்தது என்னை மேலும் கடுப்பாக்கியது.

எப்படியும் அவளும் தீநகருக்குதான் வருவாள் என்று நம்பியது மனம். ஆனால் நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டு அதற்கு இரண்டு நிறுத்தத்திற்கு முன்பே இறங்கி விட்டால். அரைமணி நேரம் ஒரு பெருமழை போல் என்னுள் நிரம்பியவள் அரைநொடியில் கானல் நீராய் விலகிப்போவதை நினைக்க கஷ்ட்டமாகத்தானிருந்தது.

என்னுள் இத்தனை பாதிப்பிகளை உண்டாக்கிவிட்டு அவள் அதே அமைதியுடன் சலனமற்று இறங்கிக்கொண்டிருந்தாள். மலைமுகட்டு மேகம் போல் அவள் மீதே கவிழ்ந்திருந்தது என் பார்வை. அவள் இறங்கி பேரூந்து வந்த திசைநோக்கி நடக்க ஆரம்பித்தால், பேரூந்தும் கிளம்பிற்று பின்புற கண்ணாடி வழியாக எட்டிப்பார்த்தேன் சற்று தூரம் சென்றவள் வலது பக்கமாக இருந்த தெருவில் நுழைந்து மறைதாள். அதுவரையில் ஒரு சித்திரக்கரனைப்போல் வர்ணங்களை மாறிமாறி பூசியவள் சட்டென்று காற்றைப்போல் கடந்து போய்விட்ட சிறுவலியுடன் தலைகவிழ்த்து தரைப்பார்த்து நின்றிருந்தேன்.

‘யாம்பா வழியில நின்னுக்கினு என்ன பகல்கணவா கண்டுக்கினுருக்க மத்த ஆல் போத்தேவல’ என்றொரு குரல் கேட்டுத் திறும்பிப் பார்த்தேன் பெருத்த மீசையுடன் முரைத்துப் பார்த்தார் ஒரு நபர், புன்னகையுடன் நகர்ந்தேன்.

5 comments:

ஆ.முத்துராமலிங்கம் May 23, 2009 at 9:22 PM  

சோதனை பிண்ணூட்டம்.

sakthi May 24, 2009 at 2:14 AM  

ஒரு சித்திரக்கரனைப்போல் வர்ணங்களை மாறிமாறி பூசியவள் சட்டென்று காற்றைப்போல் கடந்து போய்விட்ட சிறுவலியுடன் தலைகவிழ்த்து தரைப்பார்த்து நின்றிருந்தேன்.

nice story

a gud one too

S.A. நவாஸுதீன் May 24, 2009 at 4:57 AM  

சைட் அடிச்சதக் கூட சுவாரசியமா சொல்லி இருக்கீங்க.

ஆ.முத்துராமலிங்கம் May 24, 2009 at 6:24 PM  

நன்றி சக்தி, ஏஸ்.எ.நவாஸ்.
இது ஒரு மீழ் பதிவு என்னுடைய பழைய தளம் அழிந்து விட்டமையால் இதை புதிதாக துவங்கயுள்ளேன்.
ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும்

நிலாரசிகன் May 24, 2009 at 6:41 PM  

ஒரு சின்ன வேண்டுகோள்.. எழுத்துப்பிழை இருக்கும் முடிந்த வரை சொல்லிக் கொடுங்கள் கற்றுக் கொள்கிறேன்.

//சோதனை பிண்ணூட்டம்//

சோத‌னைக்கே சோத‌னையா? :)

பின்னூட்ட‌ம்.

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP