ஈழத்துளிகள் (ஹைக்கூ)

Saturday, May 23, 2009

: குண்டுகள் துளைத்த
சுவற்றில் குருவியின் கூடு.


: பள்ளி விட்டதும்
விரைந்து வந்தது
கவச வாகனம்.


: வீடுகள் பாதுகாப்பானவையல்ல
உணர்த்துகின்றது
மரக்கிளையில் குழந்தையின்
தொட்டில்.


: சப்தம் கேட்டு எட்டிப்பார்த்தது
பொந்துக் கிளி
முரிந்து விழுந்தது மரம்.


: அடித்து சாத்தியது கதவு
ஆளில்லாத வீட்டில் காற்று.


: விமானம் பறந்து சென்றபின்
வீதியில் கிடந்தது பாட்டியின்
சுருக்குப்பை.


: மிச்சமிருந்த முந்தையநாள்
உறக்கமும் பாழாய் போனது
அகதிகள் முகாமில் துயிலாத விழிகள்.

0 comments:

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP