வலையைக் கடித்த எலி

Sunday, May 24, 2009


நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்
மொதல்ல நான் யாருன்னு சொல்லிகிரேன்… நான்தாங்க ‘பதின்மரக்கிளை’ன்னு பதிவுள கவிதை எல்லாம் எழுதிகிட்டு இருந்தவன்.

என் வலை முடிந்த 18-05-2009 அன்று ஏதோ ஒரு சுப லக்கனத்தில் நல்ல நேரம் இரவு 12 மணிக்கு மேல் யாரும் விழித்திராத போது கவனிக்காமல் விடபட்ட கொடிய நோயால் (அதாங்க ntamil உண்டு பண்ணிய வைரஸ்) சமாதி நிலை அடைந்து விட்டதை வருத்தத் தோடு தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் துக்கம் நடந்த வீட்டுல உடனே ஒரு நல்லகாரியம் நடக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க அதனால நான் கையோட இந்த புதிதாக இந்தத் தளத்தை துவங்கியுள்ளேனுங்க (எல்லாம் உங்க மேல உள்ள தைரியத்துலதான்).

இப்ப மேட்டருக்கு வரேன்!
எனக்கு 18-05-2009 அன்று என்னுடைய ‘முடிச்சு’க் கவிதைக்கு (அது முடிஞ்சி போன ஒன்னுங்குறீங்களா) நண்பர் ஆதவா பிண்ணூட்டமாக
உங்கள் தளத்தில் ntamil.com மால்வேர் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. தேவையற்ற தளங்களின் தொடுப்புகளை நீக்கிவிடவும்”.
என்று எச்சரித்திருந்தார். எனக்கு அதை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அதற்கான அக்கறை இன்றி நிதானமா ntamiலை நீக்கி விடலாம் என்று இருந்து விட்டேன். அதுதான் என்னக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு!!!. (சுயபுத்திதான் இல்ல சொல்புத்தியுமா இல்லங்கரது இதுதானோ) இரவு 11 மணிவரை நண்பர்களுக்கு பிண்ணூடமிட்டு விட்டுதான் அன்று சென்றேன். அது வரைக்கும் நல்லாதான் இருந்தது மறுநாள் காலையில் (19-05-2009) அன்று என் கனைக்கை திறந்த போது அதிர்ச்சி. என் டேஸ்போர்டில் ‘பதின்மரக்கிளை’ இல்லை. அதிர்ந்து போய் என் வலை முகவரியை (http:muthu5.blogspot.com) தேடினேன்...
Blog has been removed
Sorry, the blog at muthu5.blogspot.com has been removed. This address is not available for new blogs.
Did you expect to see your blog here? See: 'I can't find my blog on the Web, where is it?'


இப்படி அழிந்து விட்டதாக வந்தது. விசயம் என் திர்ச்சியை மீறிவிட்டிருந்தது புரிந்தது. உடனே நண்பர் ஆதவாவிற்கு ஒரு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினேன் அவர்தான் என் பிரச்சனை என்ன என்பதை அறிந்து ஒரு சுட்டியை அனுப்பினார். இதை கிளிக் செய்து நீங்களும் பார்க்கலாம்….
என் பதின்மரக்கிளை இங்கு உள்ளது பார்க்க மட்டுமே செய்யலாம்.

இதில் ntaml மற்றுப் gumblar இவ்விரண்டிலும் வைரஸ் உள்ளதாகவும் அதன் விளைவாக என் வலையை தற்காலிகமாக அழித்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் கூகிலிடம் தளத்திற்குரியவர் கேட்டுக் கொண்டால் திரும்ப தரப்படும் ஆனால் எப்பன்னு எங்களுக்கே தெறியாது (வரும் ஆனா வராது… ங்ர கதை) என்று சொல்லப்பட்டு விட்டது.

இப்படி நம்மிற்கு தெரியாமலோ அல்லது கவனக்குறைவாலோ இது போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து விடும் அபாயம் பெருகிவிட்டது. ஆதலால் நண்பர்களே நம் தளத்தை பாதுகாக்க சற்று கவனம் கொள்ளுங்கள் (இது கூட தெரியாத உன்னமாதிரி முட்டால் இல்ல நாங்கன்னுரவங்க விட்டுடலாம்). நம்மளுடைய பதிவை மாதம் ஒரு முறையாவது சேமித்து வைத்துக் கொண்டால் நல்லது.
இப்படி செய்க;
Blog - Settings - Export a blog - Download Blog
அடுத்ததாக இதே போல் டேஸ்போர்டின் கீழ் இருக்கும் Webmaster Tools னுள் சென்று நம் வலைத்தளம் என்ன நிலையில் உள்ளது என்று பார்த்துக் கொள்ளலாம்.

வைரஸ் தாக்கப்பட்ட என் தளத்தின் தகவல்களை கீழே பாருங்கள்


நம் தளம் நள்ள முறையில் இருந்தாள் அனைத்துப் பகுதியிலும் 'டிக்' செய்திருக்கும் தளம் பாதிக்கப் பட்டிருந்தால் 'அபாயக்' குறியிட்டு அதற்க்கான விளக்கமும் கொடுக்கப் பட்டிற்கும்.
இதைப் பற்றி மேலதிக விபரம் தெரிந்தவர்கள் பிண்ணுட்டத்தில் தெரிவியுங்கள், மேலும் மூத்தப் பதிவர்கள் இது பற்றி தெளிவானதொரு பதிவை இட்டால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று என்னுகின்றேன்.

தளத்தை பறிகொடுத்தவன் என்ற முறையில் இதை வலியுறுத்தி உங்களுடன் பகிர்ந்து கொண்ண்டேன். முடிந்த அளவு தளத்தை பாதுகாக்க கவனம் கொள்ளுங்கள் அவ்வளவே இப்பதிவின் நோக்கம்.

இன்னும் தலைப்புசார்ந்த ஒரு எலியை ச்சி.. ச்சி.. வரியைக் கூட கானுமேன்னு தேடுறது புரியுது. அது என்னன்னா... நம்ம கனிணியில் வால் புகுத்தி மேஜையில் படுத்திருக்குமே... எலி அத கொஞ்சம் கவனமா உபயோகப் படுத்துங்க கண்ட இடத்துல மேய விட்டா இப்படிதான் நம்ம வலையையே கடிச்சு நாசம் பண்ணிரும்.


நன்றி.
என்றும் அன்புடன்,
ஆ.முத்துராமலிங்கம்.

28 comments:

திகழ்மிளிர் May 24, 2009 at 8:45 PM  

தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு
நன்றி

Anonymous May 24, 2009 at 9:20 PM  

பதின்மரக்கிளை இந்த பெயரே இந்த வலைப்பூவை அணுகச்செய்யும் ஆர்வம் உண்டாக்கும் இதை இழந்ததில் எனக்கும் வருத்தமே....மற்றும் இந்த பதிவு உங்கள் உயர் நோக்கை வெளிப்படுத்துகிறது... நாங்களும் எச்சரிக்கையாய் இருக்க இந்த பதிவு பயன்படுகிறது... நன்றி முத்து அவர்களே......

குடந்தை அன்புமணி May 24, 2009 at 9:56 PM  

வாங்க முத்துராமலிங்கம்! பாதிக்கப்பட்ட நீங்கள் அதைப்பற்றி விரிவாக பதிவிட்டஉங்களுக்கும், உங்களுக்கு உதவிய நல்உள்ளங்களுக்கும் நன்றி! இனி ஜாக்கிரதையாக இருப்பார்கள் நண்பர்கள்... வாழ்த்துகள்!

ஆ.ஞானசேகரன் May 24, 2009 at 10:03 PM  

//என் வலை முடிந்த 18-05-2009 அன்று ஏதோ ஒரு சுப லக்கனத்தில் நல்ல நேரம் இரவு 12 மணிக்கு மேல் யாரும் விழித்திராத போது கவனிக்காமல் விடபட்ட கொடிய நோயால் (அதாங்க ntamil உண்டு பண்ணிய வைரஸ்) சமாதி நிலை அடைந்து விட்டதை வருத்தத் தோடு தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் துக்கம் நடந்த வீட்டுல உடனே ஒரு நல்லகாரியம் நடக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க அதனால நான் கையோட இந்த புதிதாக இந்தத் தளத்தை துவங்கியுள்ளேனுங்க (எல்லாம் உங்க மேல உள்ள தைரியத்துலதான்).//

வாங்க ஆ.முதுராமலிங்கம்...

அமுதா May 24, 2009 at 10:08 PM  

தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி. புது தளத்தில் தொடருங்கள்

ஆ.ஞானசேகரன் May 24, 2009 at 10:08 PM  

உங்கள் புதிய பதிவிற்கு வாழ்த்துகள்,... மேலும் எச்சரிக்கை இடுக்கைக்கும் பாராட்டிகள் நண்பா.. இதைப்பற்றி எனக்கு தெளிவில்லை அறிந்தவர்கள் மேலும் விளக்கினால் ந்ல்லது

ஆ.முத்துராமலிங்கம் May 24, 2009 at 10:12 PM  

திகழ்மிளிர் said...
தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு
நன்றி

நன்றி திகழ்மிளிர் வருகைக்கும்,
பகிர்விற்க்கும்.

ஆ.முத்துராமலிங்கம் May 24, 2009 at 10:19 PM  

வாங்க தமிழரசி அதே பெயரில்தான் ஆரம்பிக்க நினைத்தேன். அது ஒருப் பருவத்தை சார்ந்தது காதல் மட்டுமே அத் தலைப்புக்கு உரித்ததாகும் ஆதலால் இந் பெயர் மாற்றம்.
மேலும் உங்கள் பகிர்விற்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றி.

ஆ.முத்துராமலிங்கம் May 24, 2009 at 10:22 PM  

வாங்க அன்புமணி
இனி பதிவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கவேண்டும்.

நன்றி பகிர்துக்ககு.

ஆ.முத்துராமலிங்கம் May 24, 2009 at 10:24 PM  

ஆ.ஞானசேகரன் said...
உங்கள் புதிய பதிவிற்கு வாழ்த்துகள்,... மேலும் எச்சரிக்கை இடுக்கைக்கும் பாராட்டிகள் நண்பா.. இதைப்பற்றி எனக்கு தெளிவில்லை அறிந்தவர்கள் மேலும் விளக்கினால் நல்லது

ஆமாம் ஞானசேகரன் இது பற்றி அறிந்தவர்கள் பதிவிட்டால் நண்மேயே

ஆ.முத்துராமலிங்கம் May 24, 2009 at 10:25 PM  

அமுதா said...
தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி. புது தளத்தில் தொடருங்கள்

பகிர்ந்தமைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க அமுதா.

வனம் May 24, 2009 at 11:45 PM  

வணக்கம் முத்துராமலிங்கம்

தகவல்கள் என்னைப்போன்ற தற்குறிக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது

நீங்க எங்க போனாலும் விடமாட்டம் ல


என் வலைப்பூவை நேரடியாக திரக்கும் போது அது வேறு ஒரு வலைப்பக்கத்திர்கு செல்கின்றது இதைப்பற்றி ஏதேனும் தெரியுமா

இராஜராஜன்

ஆதவா May 25, 2009 at 2:00 AM  

வணக்கம். ஆ.முத்துராமலிங்கம்..

நான் உங்களுக்கு என்ன உதவி செய்தேன் என்றே தெரியவில்லை. நீங்கள் முன்னமே ntamil ஐ அழித்திருந்தால் அல்லது முன்பே நான் ntamil ஒரு வைரஸ் என்று சொல்லியிருந்தால் ஒருவேளை உங்களுக்கு நான் உதவியிருக்கக் கூடும்...

எனினும் இனிமேல் Third Party Elements எதாவதை தளத்தில் கொடுக்கும் முன்னர் நன்கு யோசிக்கவும்...

Backup நீங்கள் சொல்லியிருப்பது வெறும் Template மட்டும்தான்...
பதிவுகளையும் பின்னூட்டங்களையும் Backup போட்டு வைக்க கீழ்கண்ட வழிமுறையைப் பயன்படுத்துங்கள்.. (இதை பதிவிலும் மாற்றிவிடுங்கள்)

Blog - Settings - Export a blog - Download Blog

கொஞ்சம் நேரம் எடுக்கும்... இருந்தாலும் பொறுமையாகக் காத்திருந்து செய்யவும்... நாம் எழுதிய எழுத்துக்கள் நம்மை விட்டு நீங்காமலிருக்க வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கொருமுறை இப்படி செய்துகொள்ளுங்கள்!!!

அன்புடன்
ஆதவா

Kripa May 25, 2009 at 2:18 AM  

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

அபுஅஃப்ஸர் May 25, 2009 at 3:21 AM  

நன்றி தல ஷேரிங்க்கு, இருந்தாலும் அலார்ட்டா இருப்போம்லே......

த.ஜீவராஜ் May 25, 2009 at 3:40 AM  

வாங்க முத்துராமலிங்கம்!
தொடருங்கள்

தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு
நன்றி

கே.ரவிஷங்கர் May 25, 2009 at 3:40 AM  

அண்ணே வந்துட்டீங்களா! அப்பா...!
ஒரு வாட்டி நா அங்க போய் ஒபன் பண்ணி ஹாங்க் ஆகி முழி பிதுங்கிடிச்சி.

அண்ணே எழுத்துப் பிழைகள கவனிங்க.

ஆ.முத்துராமலிங்கம் May 25, 2009 at 5:24 AM  

வனம் said...
வணக்கம் முத்துராமலிங்கம்

உங்களுக்கு இப்பதிவு உதவியிருந்தால் அதுவே சந்தோசம்

/என் வலைப்பூவை நேரடியாக திரக்கும் போது அது வேறு ஒரு வலைப்பக்கத்திர்கு செல்கின்றது இதைப்பற்றி ஏதேனும் தெரியுமா/

அப்படியேதும் இடையூறு இருந்தது போல் தெறியவில்லை.

ஆ.முத்துராமலிங்கம் May 25, 2009 at 5:33 AM  

வாங்க ஆதவா!
அதன் பின்னான உங்கள் தகவல்கள் எனக்கு உதவியாகவே பட்டது... சரி அதவிடுங்க.

பதிவுகளை சேமிக்க நீங்கள் சொன்ன வழிமுறையை பதிவிலும் மாற்றி விட்டேன்.

ஆ.முத்துராமலிங்கம் May 25, 2009 at 5:37 AM  

முயற்சிக்கின்றேன் Kripa

------*------

நன்றி - அபுஅஃப்ஸர்

நன்றி - த.ஜீவராஜ்
நன்றி - கே.ரவிஷங்கர். (எழுத்துப் பிழையை முயற்சிக்கின்றேன்)

Anonymous May 25, 2009 at 9:53 AM  

subangan.blogspot.com has one post about this

http://subankan.blogspot.com/2009/05/blog-post_23.html

yathra May 25, 2009 at 1:05 PM  

மிகவும் வருத்தமா இருக்குங்க முத்து.

Suresh May 29, 2009 at 11:24 AM  

நண்பா எனக்கு நண்பர்கள் சொன்னதும் அதை பற்றி கூகுளில் தேடி பின்பு அதை என் தமிழ் என்று கண்டு பிடித்து ரிமுவ் செய்துட்டேன்...

நண்பர்களிடம் சொல்வதறக்குள் எல்லாம் போச்சு :-(

நல்ல வேளை சைட்டில் இருந்து டோமையினுக்கு மாறியாச்சு ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி வெப் மாஸ்டர் டைச்ட் ரொம்ப முக்கியம் அதை செய்து பார்த்தும் தான் தெரிந்து க்கொண்டேன்..

பேக் அப் அப்போ அப்போ எடுத்த்க்கோங்க

ஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 7:35 PM  

Suresh said...
நண்பா எனக்கு நண்பர்கள் சொன்னதும் அதை பற்றி கூகுளில் தேடி பின்பு அதை என் தமிழ் என்று கண்டு பிடித்து ரிமுவ் செய்துட்டேன்...

நல்ல வேளை நீங்க முன் எச்சிக்கையா இருந்து இருக்கீங்க.
நல்லது நண்பா. எனக்கு ஆதவா சொன்னார் இந்தும் என் அறியாமையில் இந்த விளைவு.

இப்ப கவனமா இருக்க வேண்டும்
பேக்கப் நிச்சயம் எடுக்கின்றேன் நண்பா.

Anonymous May 30, 2009 at 5:17 AM  

நீங்களா அண்ணா இது! எங்கடா ஆளை கானம்னு பார்த்தேன்... புதிய தளம் சிறப்பாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!

Anonymous May 30, 2009 at 5:20 AM  

எனக்கும் அதே கதிதான்... எனது புதிய முகவரி
http://stpgavin.blogspot.com/

ஆ.முத்துராமலிங்கம் May 30, 2009 at 10:54 AM  

என்ன கவின் உங்க வலையையும் எலி கடிச்சுடிச்சா!!!

கும்மாச்சி June 1, 2009 at 9:51 AM  

அண்ணே நம்மக் கதையும் உங்க கதை மாதிரித்தான். ஒரு இருபத்து நாள் ஊருக்கு சென்று வந்தேன், திரும்ப வந்து பதிவுப் போடப் பார்த்தால், ப்லோகை காணவில்லை.

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP