காதல்

Saturday, May 23, 2009


இளமையின் சிலந்திவளை
சிக்காதவர் எவருமில்லை
வாலிபத்தின் பருவமுத்திறை
பதியாத நெஞ்சொன்றுமில்லை
பருவ வாசலின் முதல் படி – இதில்
ஏறித்தான் செல்லவேண்டும் அடுத்த படி.,
*

வாழ்கையின் வசந்தகாலம்
வாழ்ந்தவர் அடைந்த ஞானம்
கனவுகளின் கலைகூடம்
கலையாத பசுமை வேடம்.
*

தனிமைதான் இதற்கு நன்பன்
நிலவுதான் இதற்கு தூரத்து சொந்தம்
மலர்கள்தான் இதற்கு மகுடம்.
*

வானவில் சாலையில் வண்ணப்பயணம்
முட்கள் பதிந்த காலனித்தொட்டு
பூமஞ்சத்தில் பனி போல் தூக்கம்
தென்றல் கூட புயல்தான் அதற்கு,
*

காதல் ஒரு நெருப்பு
அளவாக எரிந்தால் தீபம்
அதிகமாக எரிந்தால் சாபம்!

இந்த தீ
கொஞ்சம் விசித்திரமானதும் கூட
இதயத்தில் எரிந்து கொண்டே இருக்கும்
அதன் ஜுவாலை உணர்வில் குளிரூட்டும்
ஆதலால் இது
குளிரும் நெருப்பு.
*

காதல் ஒரு பள்ளி
உன்மையான பள்ளி

இங்கு சேர சாதி சான்றிதல் தேவையில்லை
மத அடிப்படையில் பிரிப்பதில்லை
பணம் அந்தஸ்து பார்ப்பதில்லை.

கண்ணையும் பேசவைத்தது
மெளனத்தையும் மொழியாக்கியது
உயிரையும் உணரவைத்தது
விரகத்தையும் விளங்கவைத்தது.
*

கண்ணுக்கு இமையே சிறையா
காதலென்பது பகையா?
கடலுக்கு அலையே சுமையா
காதலென்பது பழியா?

குன்றாய் நின்ற நெஞ்சும்
காதல் முகில் தொட்டால் பனியும்
கல்லாய் இறுகிய மனமும்
காதல் சாரல் விழுந்தால் கரையும்
தறுகாய் வளர்ந்த உள்ளமும்
சருகாய் எரியும் – காதல்
சுடர் விழுந்தால்
*

காதல் புனிதமானது
ஆனால்!
காதலிப்பதுதான் பாவம்

காதல் தெய்வீகமானது
ஆனால்!
காதலிப்பவர்கள்தான் தீண்டதகாதவர்கள்
*

காதல்…
இளமையின் இனிய வரம்
இதயங்கள் இனையும் பாலம்.

0 comments:

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP