அலைகளையை கொலை செய்தவன்

Saturday, May 23, 2009


கால்களை தொட்டுச் சென்ற
அலைகளை துரத்திச் சென்றேன்
உள்ளிழுத்து சென்ற அலை
உருவம் அழிந்து கடலானது.
அடையாளம் கண்டு கொள்ள
இயலாதவனாய் நுரைகளை
உதறிவிட்டு திரும்புகையில்
அது மற்றொரு அலையாக வந்து
என்னை முழுதும் நனைத்து விட்டு சென்றது.

-*-

அப்பகல் ஒன்றும்
முக்கியமானதாய் இல்லை

நனைந்த உன் ஆடைகளை
உலறவைத்ததை தவிர வேறெதுவும்
செய்திருக்கவில்லை

வார்த்தைகளை தேடி
கண்களை கடலில்
புதைத்திருந்த போது
அது நம் இடை வெளியில்
படுத்திருந்தது

மெளனங்களை உதிர்த்துக்கொண்டிருந்த
நாம் விழிகளை இறக்கி விரல்களை
தீண்டுகையில் அப்பகல் முடிந்து விட்டிருந்தது.

-*-

உன்னை நனைத்துவிட்டுச் சென்ற
அவ்வலையை கொலைசெய்யும்
நோக்கத்துடன் வெளியில் காத்திருந்தேன்.
வரும் ஒவ்வொரு அலையையும்
இடைமறித்து கொலை செய்தேன்.
அவைகள் மீண்டும் மீண்டும் பெருக்கெடுத்துக்
கொண்டே இருக்கின்றன
நம் காதலை போல.

-*-

0 comments:

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP